JioCinema: ஜியோசினிமாவின் புதிய தொடர்களான லால் பட்டி , ரஃபுச்சக்கர் , யூனியன்: தி மேக்கிங் ஆஃப் இந்தியா போன்ற பல தொடர்களின் வருகையால் ஓடிடி உலகம் பெரியளவில் போட்டியை காணவிருக்கிறது. ரன்தீப் ஹூடா, நானா படேகர், கே.கே.மேனன் மற்றும் பிற பிரபல நடிகர்கள் ஜியோசினிமாவின் இந்த புதிய தொடர்களின் மூலம் தங்களது டிஜிட்டல் இன்னிங்க்ஸை தொடங்கவிருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. இன்ஸ்பெக்டர் அவினாஷ்: நீரஜ் பதாக் இயக்கத்தில் ரன்தீப் ஹூடா மற்றும் ஊர்வசி ரவுடேலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள தொடர் 'இன்ஸ்பெக்டர் அவினாஷ்'.  இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சூப்பர் காப் அவினாஷ் மிஸ்ராவைச் சுற்றி கதை நகர்கிறது.  இது 1997 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட கதை,  உ.பி.யின் குற்றங்களைச் சுற்றி வரும் இந்த நிகழ்ச்சி, உத்தரப்பிரதேச மாநிலத்தை மெக்சிகோவுடன் ஒப்பிடுகிறது.  ஒரு குற்றவியல் அமைப்பை வீழ்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு சிறப்புப் பிரிவை வழிநடத்தும் ஆற்றல்மிக்க போலீஸ் அதிகாரியை மையமாகக் கொண்டது. 


மேலும் படிக்க | Cook With Comali: வந்தவுடன் எலிமினேட் ஆகும் ‘இந்த’ போட்டியாளர்..! வாழைப்பழ டாஸ்க்தான் காரணமா?


2. லால் பட்டி: ஆஷ்ரம் போன்ற வெற்றித் தொடரை இயக்கிய பிறகு, பிரகாஷ் ஜா இப்போது மூத்த நடிகர் நானா படேகரை வைத்து 'லால் பட்டி' எனும் தொடரை இயக்கியுள்ளார்.  ஜியோசினிமாவுடன் இணைந்து பிரஷாந்த் ஜா உருவாக்கியுள்ள இந்த அரசியல் த்ரில்லர் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  முதன்முறையாக இந்த படத்தின் மூலம் நானா படேகர் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறார்.


3. ரஃபுசக்கர்: ஒரு போலி வங்கியைத் திறந்து மக்களின் பணத்தை மோசடி செய்ய திட்டமிடும் பார்கவ் மற்றும் சித்தாந்த் ஆகிய இரு நண்பர்களின் கதையை பின்தொடர்கிறது.  இந்தத் தொடரில் விக்கி அரோரா, அனுஜ் ராம்பால், ஷிஷிர் சர்மா, சுவாதி செம்வால், ஸ்ரேயா முத்துக்குமார் மற்றும் அலிஷா சோப்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


4. பஜாவோ: பிரபல இந்திய ராப் இசைக்கலைஞரான ரஃப்தார், ஜியோசினிமாவின் வரவிருக்கும் பஜாவோ தொடரின் மூலம் ஓடிடி அறிமுகத்திற்கு தயாராகிவிட்டார்.  இந்தத் தொடரில் பிக் பாஸ் புகழ் மஹிரா ஷர்மாவும் ஒரு முக்கிய பாத்திரத்தில் இடம்பெறுவார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  மேலும் இந்த படத்தில் சாஹில் கட்டார், மோனாலிசா ஆகியோர் நடித்துள்ளனர்.


5. யூனியன்: தி மேக்கிங் ஆஃப் இந்தியா: சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர் கே.கே.மேனன் அரசியல் சம்மந்தப்பட்ட கதைக்களம் கொண்ட 'யூனியன்: தி மேக்கிங் ஆஃப் இந்தியா' தொடரில் நடிக்கிறார்.  


6. தி மேஜிக் ஆஅஃப் ஷிரி: அதிக வருமானம் ஈட்டும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவரான திவ்யங்கா திரிபாதி, ஸ்டார் ப்ளஸின் குடும்ப நாடகமான யே ஹை மொஹப்பதீன் மூலம் புகழ் பெற்றவர்.  தற்போது அவர் 'தி மேஜிக் ஆஃப் ஷிரி' மூலம் ஓடிடி உலகில் அடியெடுத்து வைக்கிறார்.  ஊடகங்களில் வெளியான தகவலின்படி இப்படம் ஒரு பெண் மந்திரவாதியை மையமாகக் கொண்டது.


7. டாக்டர்ஸ்: நடிகர் ஷரத் கேல்கர் ஜியோசினிமாவின் வரவிருக்கும் மருத்துவம் சம்மந்தமான தொடர் 'டாக்டர்'.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜியோசினிமா அறிவித்த நூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் இந்த நிகழ்ச்சியும் ஒன்றாகும்.


8. ஏ லீகல் அஃபேர்: ஜியோசினிமாவின் வரவிருக்கும் எ லீகல் அஃபேர் தொடரின் பர்கா சிங் மற்றும் அங்கத் பேடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இது சிங் மற்றும் பேடி ஒன்றாக இணைந்து நடிக்கும் முதல் தொடராகும்.


9. கால்சூத்ரா - பிரதம் துவார் மிருத்யுததா: கால்சூத்ரா - பிரதம் த்வார் மிருத்யுதாதா தொடரில் சுபோத் பாவே மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இது ஒரு மர்மமான க்ரைம் த்ரில்லர் தொடராகும்.\


மேலும் படிக்க | Pichaikkaran 2: ‘இப்படி ஏமாத்திட்டீங்களே விஜய் ஆண்டனி..’ பிச்சைக்காரன் 2 ட்விட்டர் விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ