தளராத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் 24 ஆண்டுகால சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளார் ஜோஜு ஜார்ஜ்.  அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக "ஜோசப்" படத்தின் வெற்றி அமைந்தது. ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார்.  இந்த படம் அவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது.  மேலும் "பொரிஞ்சு மரியம் ஜோஸ்" படம் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவாக்கியது. "ஜோசப்" படம் தேசிய விருது குழுவின் சிறப்பு ஜூரி குறிப்புடன் பாராட்டுகளை பெற்றது.  ஜோஜு ஜார்ஜ் கடைசி வரை தேசிய விருதுக்காக போட்டியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அடேங்கப்பா..! விஜய் மனைவி சங்கீதாவிற்கு இவ்ளோ சொத்து இருக்கா..?


மேலும் அவரது நடிப்பில் வெளியான "சோழா" வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா - ஒரிசான்டி போட்டி, ஜெனிவா சர்வதேச திரைப்பட விழா - சர்வதேச சிறப்புப் போட்டி மற்றும் டோக்கியோ ஃபிலிமெக்ஸ் - சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர செய்தது.  ஜோஜு ஜார் தனது சினிமா பயணத்தில், "ஹலால் லவ் ஸ்டோரி," "ராமண்டே எடந்தோட்டம்," "லுக்கா சுப்பி," மற்றும் "துரைமுகம்" போன்ற வெற்றிகளின் மூலம் தனக்கான தனி இடத்தை பெற்றார், மேலும் "ஜூன்", "ஆக்ஷன் ஹீரோ பிஜு" போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கில் நடித்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.  சளைக்காத அவரது நீடித்த அர்ப்பணிப்பு, சினிமா உலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு ஒரு சான்று.


நடிகராக வெற்றி பெற்ற ஜோஜு ஜார்ஜ் இம்முறை இயக்குநராக தனது கேரியரில் மிகப்பெரிய அடுத்தகட்டத்தை எட்டி உள்ளார்.  ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கிய முதல் படம் 'பனி'. இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஜோஜுவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திருச்சூர் நகரத்தில் நடக்கும் இரண்டு கேங்ஸ்டர்களின் கதைதான் பானி படம். ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் நாயகி அபிநயாதான் இந்தப் படத்திலும் நடிக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் பானி படத்தை ஜோஜுவின் தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏடி ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆதம் மற்றும் சிஜோ வட்கான் ஆகியோர் தயாரிக்கின்றனர்.


ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிநயா தவிர, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், மெர்லட் ஆன் தாமஸ், லங்கா லட்சுமி, சாரா ரோஸ் ஜோசப், பாபு நம்பூதிரி, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரஞ்சித் வேலாயுதன், பிட்டோ டேவிஸ், ரினோஷ் ஜார்ஜ், இயன் மற்றும் இவான் , அன்பு , ரமேஷ் கிரிஜா, டோனி ஜான்சன், பாபி குரியன் மற்றும் பிக் பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சாகர் மற்றும் ஜுனைஸ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல இயக்குனர் வேணுவும், படத்தொகுப்பை மனு ஆண்டனியும், இசை விஷ்ணு விஜயா கையாள்கின்றனர். 



ஒலி வடிவமைப்பு: அஜய் அதாத், தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஜெயன் நம்பியார், ஒப்பனை: எம்.ஜி. ரோஷன், சமீர் ஷாம், ஆடை: சமீரா சனீஷ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: தீபக் பரமேஸ்வரன், ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன், நடனம்: சந்தியா மாஸ்டர், ஷிஜித், பார்வதி மேனன், முதன்மை இணை இயக்குனர்: அனில் மேத்யூ, இணை இயக்குனர்: ரதீஷ் பிள்ளை, ஜாபர் சனல், நிஷாத் ஹாசன். விநியோகம்: ஆண்டோ ஜோசப் பிலிம் நிறுவனம், இணை தயாரிப்பு: வர்கி ஜார்ஜ், நிர்வாகத் தயாரிப்பாளர்: அக்னிவேஷ் ரஞ்சித், VFX: Luma FX


மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 7... இவர்கள் ஏற்கெனவே காதலர்களா? - அப்போ இனி வீட்டில் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ