அடேங்கப்பா..! விஜய் மனைவி சங்கீதாவிற்கு இவ்ளோ சொத்து இருக்கா..?

Vijay Wife Sangeetha Net Worth: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு இருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 22, 2023, 01:35 PM IST
  • கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர், விஜய்.
  • விஜய் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
  • முழு விவரம் இதோ.
அடேங்கப்பா..! விஜய் மனைவி சங்கீதாவிற்கு இவ்ளோ சொத்து இருக்கா..?  title=

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். 1984ஆம் ஆண்டில் தொடங்கிய விஜய்யின் சினிமா பயணம், கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இவர், 1999ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். 

விஜய்-சங்கீதா ஜோடி:

நடிகர் விஜய், 90களிலேயே பலரும் கவனிக்கும் வகையிலான நடிகராக மாறிவிட்டார். துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, குஷி, பத்ரி உள்ளிட்ட படங்கள் வெளிவந்த போதே இவருக்கு பல லட்ச ரசிகர்கள் சேர்ந்து விட்டனர். இளம் நடிகர் ஒருவர் திரையுலகின் உச்சியில் இருக்கிறார் என்றால் அவர் கண்டிப்பாக பல கன்னிகளின் மனங்களிலும் இடம் பிடித்திருப்பார். அப்படி, விஜய்க்கு அதி தீவிர ரசிகையாக சங்கீதா இருந்ததாக கூறப்படுகிறது. “பூவே உனக்காக” படத்தை பார்த்ததில் இருந்து விஜய்யின் ரசிகையாக மாறினாராம் சங்கீதா. இவர்கள், தங்களின் குடும்பத்தினர் மூலமாக ஒருமுறை சந்தித்து கொண்டதாகவும் அதன் பிறகு இரு வீட்டார் இணைந்து இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

குடும்பம்:

விஜய்யின் மனைவி சங்கீதா, தொழில்முறை பட்டப்படிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்-சங்கீதா ஜோடியின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய், 2000ஆம் ஆண்டு பிறந்தார். இவர் லண்டனில் உள்ள ஒரு திரைப்பட கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்துள்ளார். இவர், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தினை இயக்க உள்ளார். விஜய்-சங்கீதாவிற்கு இரண்டாவதாக பிறந்த மகள், திவ்யா சாஷா. இவர் 2005ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் மற்றும் சங்கீதா சென்னையில் வசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Sivakarthikeyan Net Worth: சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சங்கீதாவின் சொத்து மதிப்பு:

விஜய் ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருக்க, அவரது மனைவி சங்கீதா சொந்தமாக பல தாெழில்களை செய்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவின் பெயரில் பல சொத்துக்களை வாங்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு ரூ.400 கோடி வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

விஜய்யின் சொத்து மதிப்பு:

தென்னிந்தியாவில், அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலிலும் பணக்கார பிரபலங்களின் பட்டியலிலும் இருப்பவர், நடிகர் விஜய். சில வருடங்களுக்கு முன்பு வரை டபுள் டிஜிட் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வந்த விஜய், தற்போது ட்ரிப்புள் டிஜிட் காேடியில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ‘லியோ’ திரைப்படத்திற்காக அவர் 120 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். அடுத்து, ‘தளபதி 68’ படத்திற்காக விஜய்க்கு 150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு பங்களா, விலை உயர்ந்த ஆடம்பர கார்கள், விஜய் மக்கள் இயக்கம் என விஜய்க்கு அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் பல கோடிகள் மதிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தாேராயமாக விஜய்க்கு ரூ.475 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு இருக்கலாம் என பேசப்படுகிறது. 

விஜய்-சங்கீதா திருமண முறிவு? 

நடிகர் விஜய்க்கும் சங்கீதாவிற்கும் விவாகரத்து ஆக உள்ளதாக சமீப காலமாக சில தகவல்கள் இணையத்தை சுற்றி வந்த வண்ணம் உள்ளன. இவர்கள் இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்வதாகவும் இதற்கு ஒரு பிரபல நடிகைதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனையா? பெரிய கோடீஸ்வரர் தான் பா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News