பிரபல ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். அவர் இயக்கப்போகும் முதல் படத்தில் நிவின் பாலி நாயகனாக நடிக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'கைரளி' என்ற பெயரில் உருவாகும் இந்த புதிய படத்தின் மூலம் ஜோமோன் டி.ஜான் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 


இவர் 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா', 'தட்டத்தின் மறையத்து', 'ஒரு வடக்கன் செல்பி' , ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' போன்ற மலையாள படங்களுக்கும், ரோஹித் ஷெட்டி இயக்கி வரும் 'கோல்மால் 4' படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


1979-ம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'எம்வி கைரளி' பற்றிய படம் இதுவாகும்.


நிவின் பாலியின் ஜே.ஆர். பிக்சர்ஸ் உடன் இணைந்து 'ரியல் லைப் ஒர்க்ஸ்' நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.