‘ஜூலி-2’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியீடு!!
![‘ஜூலி-2’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியீடு!! ‘ஜூலி-2’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியீடு!!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/09/19/119217-julie2.jpg?itok=MlsH3Y22)
தீபக் ஷிவதாசன் இயக்த்தில் பிரபல நடிகை ராய் லட்சுமி கதாநாயகியாக நடிக்கும் ‘ஜூலி-2’ படத்தின் டைட்டில் ட்ராக் வெளியாகி உள்ளது.
இது 2004-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஜூலி’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த படத்தில் ரதி அக்னிஹோத்ரி, சஹில் சலாதி, ரவி கிஷென் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஒரு சராசரி பெண் மிகப் பெரிய நடிகையாக உருவாக அவள் மேற்கொள்ளும் பயணம் தான் இப்படத்தின் கதை என ராய் லட்சுமி குறிப்பிட்டிருந்தார். இந்த படம் அடுத்த மாதம் அக்டோபர் 6-ம் தேதி வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.