அந்தகன் - தியாகராஜன் இயக்கிய இப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பிரசாந்த், சிம்ரனை நீண்ட கால இடைவெளிக்கு பிறகு திரையில் ஒன்றாக பார்க்க உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த முறை அந்தகன் படம் வெளியாகும் என்கிற நம்பிக்கையுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!


கொலை - பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு ஆக்‌ஷன் கிரைம் திரில்லர் படமாகும், மேலும் இந்த படத்தை ஜூலை 21 ஆம் தேதி வெளியிடுவதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். படத்திற்கு கிரிஷ் ஜி இசையமைத்துள்ளார். பிச்சைக்காரன் 2 வை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அடுத்த படமாக கோலை வெளியாக உள்ளது.  சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகின.


மார்க் ஆண்டனிஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மார்க் ஆண்டனி, விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஒரு அறிவியல் புனைகதை த்ரில்லர். விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் கதை இரண்டு பெரிய ஷாட் கேங்க்ஸ்டர்களை சுற்றி வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் முதலில் ஜூலை மாதம் வெளியாக இருந்தது.  இந்நிலையில், செப்டம்பர் 19ம் தேதியான விநாயகர் சதுர்த்தி தினத்தில் படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  மேலும் அதே தேதியில் லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் வெளியாக உள்ளது.


மாவீரன் - மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மாவீரன்'. படத்தின் கதை ஒரு கார்ட்டூனிஸ்ட் ஒரு கற்பனை கதாபாத்திரமாக மாறி ஒரு அரசியல்வாதிக்கு எதிராக போராடுவதைச் சுற்றி வருகிறது. படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார் மற்றும் படம் ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திக்ர்ர்யன் மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடலும் பாடியுள்ளனர். ‘வண்ணார பேட்டையில’ என்ற அந்த இணையத்தில் வைரலாகி வருகிறது.  மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



பம்பர் - தங்கதுரை, ஷிவானி நாராயணன், வெற்றி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். பம்பர் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு பிரபலமான நடிகை கவிதா பாரதி. பம்பர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க | ரஜினி டூ தனுஷ்..படத்திற்காக ‘மொட்டைதலை' லுக்கிற்கு மாறிய நடிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ