விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!

Pawan Kalyan On Instagram: பிரபல நடிகர் பவன் கல்யாண், சமூக வலைதளமான இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார். இததையடத்து அவருக்கு பல லட்சம் ஃபாலோவர்ஸ் குவிந்துள்ளனர்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 4, 2023, 12:30 PM IST
  • தென்னிந்திய திரையுலகின் பிரபலமான நடிகர், பவன் கல்யாண்.
  • அரசியல் கட்சி தலைவராகவும் உள்ளார்.
  • திடீரென்று விஜய்யை போல இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியுள்ளார்.
விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!  title=

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக விளங்குபவர், பவன் கல்யாண். இவரை, ரசிகர்கள் செல்லமாக பவர்ஸ்டார் என்று அழைப்பார்கள். இவர், ட்விட்டரில் மட்டுமே கணக்கு வைத்திருந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமலிலும் கணக்கு தொடங்கியுள்ளார். 

பவன் கல்யாண்:

தென்னிந்திய பிரபலங்களுக்கும், தென்னிந்திய சினிமாவின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த முகமாக விளங்குபவர், பவன் கல்யாண்.  ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அரசியல் என பிஸியாக இருக்கும் நடிகர் இவர். இவர், தமிழில் வெளியான பல படங்களின் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்தவர் இவர்தான். தற்போது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள உஸ்தத் பகத் சிங் என்ற படமும் விஜய்யின் தெறி படத்தின் தெலுங்கு ரீ-மேக்தான் என கூறப்படுகிறது. இவர், சினிமாவில் மட்டுமல்லாது தனது பொது வாழ்க்கையிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மனிதர். இவருக்கென்று பல லட்சம் ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூக வலைதளங்கிலும் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ தற்போது இன்ஸ்டாகிராமிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க | மீண்டும் தள்ளி போகும் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படம்?

இன்ஸ்டாகிராமில் பவன் கல்யாண்..

சினிமா மூலம் ஒரு பக்கம் பார்வையாளர்களை மகிழ்விக்கும் இவர், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் விளங்குகிறார். எளிமையாக பலருடன் பழகும் திறன் கொண்ட நடிகர் இவர். சமீப காலமாக பவன் கல்யாண் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். அரசியல் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான பல விஷயங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருந்தார். இவருக்கு ட்விட்டரில் மட்டும் 5.3 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். இன்று, எந்தவித முன்னரிவிப்புமின்றி பவன் கல்யாண் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கியுள்ளார். இதனால், இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

ஒரு மணி நேரத்தில் இத்தனை ஃபாலோவர்ஸா…!

பவன் கல்யாண் இன்ஸ்டாவில் இணைந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்ய தொடங்கினர். இவர் ஒரு போஸ்ட் கூட போட்டிராத நிலையில் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேல் இவருக்கு ஃபாலோவர்ஸ் வந்துவிட்டனர். 

முறியடிக்க முடியாத விஜய்யின் சாதனை..!

தமிழ் திரையுலகின் நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கினார். இவரும் தனது ரசிகர்களுக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல்தான் இன்ஸ்டாவிற்குள் நுழைந்தார். ஆனால், இவர் இன்ஸடாவில் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 50 லட்சம் ஃபாலோவர்கள் இவர் கணக்கில் குவிந்து விட்டனர். தற்போது விஜய்க்கு 8.2 பின்தொடர்பாளர்கள் உள்ளனர். பவன் கல்யாணிற்கு உடனே ஃபாலோவர்ஸ் ஏறுவதை பார்த்த ரசிகர்கள், இவர் விஜய்யின் சாதனையை முறியடிப்பாரா என சந்தேகித்தனர். ஆனால் பவனிற்கு ஒரு மணி நேரத்தில் 25 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்ந்துள்ளனர். 

அரசியலில் பிசியாக பவன் கல்யாண்..

பவன் கல்யாண் நடிகர் என்பதை தாண்டி ஜனசேன கட்சியின் தலைவராகவும் விளங்குகிறார். இதற்காகவே பிரத்யேகமாக ‘வராஹி’ என்ற ஒரு வண்டியை தயாரித்து அதில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். மக்களும் இவர் தேர்திலில் நின்றால் இவருக்கு வாக்களிக்க மும்முரமாக உள்ளனர். இவரும், பல தமிழ் நடிகர்களை போல தான் நடிக்கும் படங்களில் அரசியல் வசனங்களையும் சமூகத்திற்கு கருத்து சொல்வது போன்ற காட்சிகளையும் ஹெவியாக இணைப்பவராக இருக்கிறார். 

மேலும் படிக்க | ரஜினி டூ தனுஷ்..படத்திற்காக ‘மொட்டைதலை' லுக்கிற்கு மாறிய நடிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News