மாதவன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் வாழ்க்கை வரலாற்று படமான 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' ஜூலை-1ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகுகிறது.  1994ம் ஆண்டு உளவு பார்த்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த படம்.  இந்த படத்தை மாதவனின் மனைவி, சரிதா தயாரித்திருக்கிறார்.  இந்த படத்தில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, முரளிதரன் போன்ற பலர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி?


ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'யானை' படம் ஜூலை-1ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  குடும்ப செண்டிமெண்ட், ஆக்ஷன் நிறைந்த இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார், மேலும் படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, அம்மு அபிராமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார், சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.



விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான 'டி பிளாக்' ஜூலை-1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  எம்என்எம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந் சிங் தயாரிக்கிறார்.  இந்த படத்தில் அவந்திகா மிஷ்ரா, கரு.பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து ஜூலை-1ம் தேதி பிறமொழி திரைப்படங்களும் வெளியாகவுள்ளன.  கன்னட திரைப்படங்களான 'பைராகீ' மற்றும் 'விண்டோ சீட்' ஆகிய திரைப்படங்கள் ஜூலை-1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது.  அடுத்ததாக தெலுங்கு திரைப்படமான 'பக்கா கமர்ஷியல்' மற்றும் ஹிந்தி திரைப்படமான 'ராஷ்ட்ராகவச்சோம்' என்கிற படமும் ஜூலை-1ம் தேதி வெளியாகுகிறது.


மேலும் படிக்க | மாதவன் அனுப்பிய புகைப்படத்தால் கடுப்பான அவரது மச்சான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR