ராஜமௌலி இயக்கத்தில் அண்மையில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. உலகளவில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்த இந்த திரைப்படத்தில் லீட் ரோலில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் நடித்திருந்தனர்.  இந்த ஆண்டு இந்தியாவில் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், 1200 கோடி ரூபாய் வசூலித்த 3வது இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த வரிசையில் அமீர்கானின் ’தங்கல்’, ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ ஆகிய படங்கள் 1200 கோடிக்கு மேல் இதற்கு முன்னர் வசூலித்திருந்தன. இந்தவரிசையில் 3வது படமாக இணைந்துள்ளது ஆர்ஆர்ஆர். இந்தப் படம் வெளியீட்டுக்கு பின், பான் இந்திய ஸ்டார்களாக உருவாகியிருக்கும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. ஜூனியர் என்டிஆர், அந்திர முன்னாள் முதலமைச்சர் என்டி ராமாராவின் பேரன் என்பது அனைவருக்கு தெரியும். அதனைக் கடந்து அவருடைய லைஃப் ஸ்டைல் பற்றிய தகவல்கள் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


மேலும் படிக்க | கொலை மிரட்டலுக்கு நடிகர்களே காரணம்; விதை கமல் போட்டது - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு


அப்படியான சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். 1983 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த ஜூனியர் என்டிஆர், ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்காக 45 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. அவர் வசிக்கும் வீடு 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்தாலும், வீட்டில் பல சொகுசு வசதிகள் உள்ளன. 2001 ஆம் ஆண்டு ஸ்டுடண்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் திரையுலகுக்கு வந்திருந்தாலும், திரைப்படங்களைக் கடந்து கார்கள் மீதே அவருக்கு அலாதி பிரியம் இருந்துள்ளது.



இதனால் வீட்டில் வரிசையாக கார்களை வாங்கிக் குவித்துள்ளாராம். பிஎம்டபள்யூ முதல் ரோல்ஸ் ராய் வரை கார்களை வாங்கி நிறுத்தியிருக்கும் அவர், அந்த கார்களுக்கு தான் ராசியாக எண்ணும் 9999 என்ற சீரியல் எண்ணையே நம்பராக வாங்கி வைத்துள்ளாராம். குறிப்பாக, அவருடைய பிஎம்டபள்யூ காருக்கு தன்னுடைய ராசியான எண்ணான 9999 -ஐ வாங்க, கிட்டதட்ட 11 லட்சம் ரூபாய் செலவழித்து அந்த எண்ணை வாங்கியிருக்கிறார். தற்போது குடும்பத்துடன் ஜூப்லி ஹில்ஸில் வசித்து வரும் ஜூனியர் என்டிஆர், பிக்பாஸ் தெலுங்கு முதல் நிகழ்ச்சியை அவர் தான் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜூனியர் என்டிஆர் பெற்ற ஊதியம் 25 கோடி ரூபாயாம். 


மேலும் படிக்க | பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR