பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்

தளபதி விஜய்யின் சமீபத்திய படமான பீஸ்ட் பிரம்மாண்டமான KGF 2 உடன் மோதியது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 21, 2022, 11:28 AM IST
  • பீஸ்டுக்கு லேட்டஸ்ட் விமர்சனம்
  • ஹீரோவை மட்டும் நம்பி படமெடுத்தா இப்படித்தான் இருக்கும்
  • பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர்
பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்  title=

சென்னை: தளபதி விஜய்யின் சமீபத்திய படமான பீஸ்ட் பிரம்மாண்டமான KGF 2 உடன் மோதியது. இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றன. 

KGF 2 பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையில் பல சாதனைகளை முறியடித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. 

ஆனால், இந்தியாவின் சில பகுதிகளில் சிறப்பாக வசூலை அள்ளினாலும், நடிகர் விஜய் நடித்த பீஸ்டுக்கு கலவையான விமர்சனங்களே வந்தன. பீஸ்ட்  திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்ன ஒரு செய்தியால் பீஸ்ட் திரைப்படம் தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது. 

தமிழ் திரியுலகின் முக்கிய திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அவர், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.

movies

விஜயின் தந்தையும் திரைப்பட தாயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர், அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் இயக்குநர் நெல்சனை கடுமையாக சாடினார்.

அதுமட்டுமல்ல, இந்த படம் தனது மகன் விஜய் என்ற ஒரு நடிகனின் நட்சத்திர அந்தஸ்த்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.  

பீஸ்ட் திரைப்படத்தில் திரைக்கதை இல்லை என்றும், திரைப்படத்திற்காக இயக்குனர் நெல்சன் தனது ஆராய்ச்சியை சரியாக செய்யவில்லை என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் செய்தி சேனல் ஒன்றிடம் கூறியதாக கூறப்படுகிறது. 
விமர்சனங்களை முன்வைத்தாலும், விஜயின் தீவிர ரசிகனாக, அதில் வரும் அரபு குத்து பாடலை ரசித்ததாகவும் விஜயின் அப்பா தெரிவித்தார்.

சினிமா

ஆனால், விஜய்யின் நட்சத்திர அந்தஸ்த்தை மட்டுமே நம்பி, திரைக்கதையில் நெல்சன் கோட்டை விட்டு விட்டார் என்று எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளைப் பற்றிய சீரியஸான சப்ஜெக்ட் கொண்ட திரைப்படத்தில், திரைக்கதையில் மேஜிக் இருக்க வேண்டும். அது எங்கே? இயக்குனர். இராணுவம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஒரு RAW முகவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். அது பீஸ்டில் இல்லை" என்று விஜயின் அப்பா விமர்சித்திருக்கிறார்.

மேலும் படிக்க | OTTயில் விஜய்யின் ‘பீஸ்ட்’- லாபமா, நஷ்டமா?

மேலும் அவர் கூறும்போது, ​​"பீஸ்ட் திரைப்படம் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு இசையமைப்பாளர், ஃபைட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர், எடிட்டர் மற்றும் ஹீரோவால் மட்டுமே படம் ஹிட் ஆகியிருக்கிறது" என்று பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.  

தளபதி விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே உறவு சுமூகமாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் நடிகர் விஜய் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தந்தை மகன் உறவைப் பற்றி பேசியிருந்தது வைரலானது.

"தந்தைக்கும் கடவுளுக்கும் ஒரேயொரு வித்தியாசம் மட்டுமே உள்ளது, கடவுளைப் பார்க்க முடியாது, ஆனால் நாம் நம் தந்தையைப் பார்க்க முடியும். என் அப்பாடுவன் முரட்டுத்தனமான இணைப்பு உள்ளது, நான் இன்னும் அவர் மீது மரியாதை வைத்திருக்கும் அர்ப்பணிப்புள்ள மகன்" என்று விஜய் சொல்லியிருந்தார்.

மேலும் படிக்க | 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News