சூரியா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் திரைப்படம் வரும் செப்டர் 20-ஆம் நாள் வெளயாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் காப்பான். இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.


கடந்த வருடம் ஜூன் 25-ஆம் தேதி இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி 'காப்பான்' வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புடெடக்ஷன்ஸ் "செப்டம்பர் மாதம் 20-ம் தேதி 'காப்பான்' வெளியாகும்" என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதே நாளில் 'காப்பான்' திரைப்படம் தெலுங்கில் 'பந்தோபஸ்த்' என்ற பெயரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.