தனது நீண்டநாள் காதலியுடன் கைகோர்த்த `காதல்` பட சிறுவன்
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான `காதல்` என்கிற படத்தில் நடித்த அருண்குமார், தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்துள்ளார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான "காதல்" என்கிற படத்தில் நடித்த அருண்குமார், தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்துள்ளார்.
இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் 'காதல்'. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும் சந்தியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
'காதல்' படத்தில் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அருண்குமார் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.இவரது தெனாவட்டு பேச்சும்,குறும்புத்தனமும் அனைவரையும் கவர்ந்திழுத்தது.டீயில் எச்சில் துப்பி கொடுக்கும் காட்சி பயங்கரமாக வைரலானது.
பின்னர் விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட சில படங்களிலும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.அப்படத்திலும் அவரது குறும்புத்தனமான நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
சில வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார்.இருவர்களது பெற்றோர்களின் சம்மதத்திற்காக இருவரும் பல வருடங்களாக காத்திருந்தனர்.தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR