பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியாக திகழ்பவர், கஜோல். ஷாருக்கானுடன் தில் வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே என்ற படம் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். மேலும், இஷ்க, தில்வாலே போன்ற பல படங்களில் நடித்து தன்க்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரும் இயக்குநருமான அஜய் தேவ்கனின் மனைவி இவர். கஜோல், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுக்க போவதாக அறிவித்திருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக்..


பல பிரபலங்கள் அவ்வப்போது சினிமாவில் இருந்தோ அல்லது சமூக வலைதளங்களில் இருந்தோ கொஞ்ச நாள் இடைவெளி எடுத்துக் கொள்வது வழக்கம். ஒரு சில பிரபலங்கள், “நமக்கு எதுக்குடா வம்பு..” என சமூக வலைதளங்களில் கணக்கே வைத்துக் கொள்வதில்லை. ஆனால், இவர்களுக்கு அப்படியே ஆபோசிட்டாக சில பிரபலங்கள் 24 மணிநேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பர். அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது, ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபடுவர். அப்படி ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் கஜோல். இவர், இரண்டு நாட்களுக்கு முன்னர், “வாழ்வின் கடினமான தருணத்தில் இருக்கிறேன்…அதனால் சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுக்கிறேன்..” என ஒரு பதிவினை வெளியிட்டுருந்தார்.



இதனால், கஜோலின் ரசிகர்கள் பலர் பெரும் கவலைக்கு உள்ளாகினர். இன்னும் சிலர், “ஈரை பேனாக்கி..பேனை பெருமாளாக்கி..பெருமாளையே பிச்சை எடுக்க விட்ட” கதையாக அஜய் தேவ்கனுக்கும் கஜோலுக்கும் விவாகரத்து ஆகப்போகிறது என்ற முடிவிற்கே வந்துவிட்டனர். ஆனால், நடந்த கதையே வேறு..


மேலும் படிக்க | பாலியல் தாெழிலாளியாக மாறிய 19 வயது ஹாலிவுட் நடிகை...! யாருடைய மகள் தெரியுமா?


தொடருக்கான ப்ரமோஷன்:


நடிகை கஜோல், “தி ட்ரையல்” (The Trail) என்ற தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடர், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காகத்தான், “Facing on of the toughest trial of my life” என்று அவர் போஸ்ட் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். 



கடும் கோபத்தில் ரசிகர்கள்..


கஜோலுக்கென்று பாலிவுட்டில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. பொதுவாகவே பாலிவுட் திரையுலகை அதிகம் ஃபாலோ செய்யும் ரசிகர்கள், அந்த துறைய சேர்ந்த எந்த நடிகருக்கும் ஏதாவது ஒன்று என்றால் துடித்துடித்து போய் விடுவார்கள். அப்படிப்பட்ட அப்செட் நிலைக்குத்தான், கஜோலின் ரசிகர்கள் அவரது ‘ப்ரேக்’ போஸ்டை பார்த்தவுடன் சென்றுவிட்டனர். ஒரு சிலர், “உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்..எல்லாம் சரியாகிவிடும்” என்றெல்லாம் டைலாக் விட்டனர். கடைசியில் இதெல்லாம் தி ட்ரையல்ஸ் தொடருக்கான ப்ரமோஷன் என தெரிந்தவுடன் மனம் ஒடிந்து போயுள்ளனர். பல ரசிகர்கள் கஜோலின் தி ட்ரையல்ஸ் பாேஸ்டிற்கு கீழ், “இதற்குதான் இவ்வளவுமா..” என பெரும் ஏமாற்றத்துடன் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர், இது மிகவும் கீழ்தரமான செயல் என்றும் ஒரு ப்ரமோஷனிற்காக இப்படியெல்லாமா ரசிகர்களை ஏமாத்துவாங்க என்றும் கமெண்டில் குமுறி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ, “என்னதான் இருந்தாலும் இது புத்திசாலித்தனமான ப்ரமோஷன்தான்..” என குறிப்பிட்டுள்ளனர். 


ஆபாச படத்தில் கஜோல்? 


தி ட்ரையல்ஸ் தொடரை அடுத்து கஜோல் நடித்துள்ள தி லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படமும் வெளியாகவுள்ளது. பெண்கள் தங்களது பாலியல் ஆசைகளை வெளிப்படுத்தும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆந்தாலஜி படமான இது, 4 எபிசோடுகளை கொண்டுள்ளது. நடிகை கஜோலுடன் இணைந்து தமன்னா, விஜய் வர்மா போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த தொடர், விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது. 


மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலகிய ஸ்பைடர் மேன் நாயகன்? டாம் ஹாலாண்டின் பரபரப்பு அறிவிப்பு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ