கலாஷேத்ராவுக்கு வக்காலத்து..! அபிராமியை புரட்டி எடுத்த பிரலபலங்கள்!
Kalakshetra Controversy: கலாக்ஷேத்ரா விவகாரம் குறித்து நடிகை அபிராமியின் தொடர் பேச்சுகளுக்கு சனம் ஷெட்டி, VJ மகேஸ்வரி, பாடகி சின்மயி உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.
Kalakshetra Controversy: "கலாக்ஷேத்ரா என்ற பெயரை உச்சரிக்க தெரியாத நபர்கள் எல்லாம் கலாக்ஷேத்ரா பற்றி பேசுறாங்க" என்று பேசி வான்டட் ஆக வண்டியில் ஏறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் தான் பிக் பாஸ் புகழ் நடிகை அபிராமி. இந்த பேச்சை எடுத்து கடந்த ஒரு வாரமாக இவர் சோசியல் மீடியாக்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் அபிராமியின் இந்த பேச்சுகளுக்கு சக பிக்பாஸ் போட்டியாளர்களான சனம் ஷெட்டி, VJ மகேஸ்வரி, பாடகி சின்மயி, முன்னாள் கலாக்ஷேத்ரா மாணவியும், சீரியல் நடிகையுமான ஜெய ஶ்ரீ லால் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவான்மையூரில் இருக்கும் கலாக்ஷேத்ராவில் பயிலும் மாணவிகள் 150 க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பேராசிரியர்கள் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இது வருவதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளானது. மேலும் இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
பிரச்னை என்ன?
இந்நிலையில் மாநில மகளிர் ஆணையம் தமிழக அரசின் அறிவுறுத்தலின் பெயரில் இங்கு விசாரணையை தொடங்கியது. பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் வெளிப்படையாக தங்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதில் சில மாணவர்களும் அந்த ஆசிரியர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக சொல்லி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக இந்த விவகாரத்தில் ஹரி பத்மன், சந்திப்புலால், சாய் கிருஷ்ணன் ஃபுல் படம் நான்கு ஆசிரியர்கள் இதில் சிக்கினர். இதில் தலைமறைவாக இருந்த ஹரிபத்மன் அண்மையில் தோழி வீட்டில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கினார். தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
அபிராமியின் கருத்து
இந்த விவகாரம் இப்படி ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க பிக்பாஸ் புகழ் அபிராமி கலாக்ஷத்ராவில் நீதி கேட்டு போராடிய மாணவிகளுக்கு எதிரான வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. 89 ஆண்டுகள் பழமையான எங்கள் கல்லூரியை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதற்காக இப்படியான வேலைகளை மாணவர்களை தூண்டிவிட்டு சில ஆசிரியர்கள் செய்து கொண்டிருப்பதாக பேசினார். மேலும் ஹரி பத்மனுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அவர் தரப்பு நியாயங்கள் பேசப்படவில்லை என்றும் கூறியிருந்தார். அந்த பேட்டி வைரல் ஆனதை தொடர்ந்து மறுபடியும் அபிராமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்த பின்னர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சையானது. அதில் செய்தியாளர்களிடம் சண்டையிடும் வகையில் அபிராமி பேசியிருந்தார்.
மேலும் படிக்க | கலாசேத்ரா பாலியல் துன்புறுத்தல் விவகாரம்... ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது என்ன?
சைலன்ட் மோடில் அபிராமி
இந்த நிலையில் அபிராமி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக முட்டுக் கொடுப்பதாக நெட்டிசன்கள் அவரை விமர்சித்தனர். அது மட்டும் இல்லாமல் இவர் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை இவரே பார்த்து இருக்கிறாரா? என்று கூட மீம்ஸ் போட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் பேசினால் மறுபடியும் சர்ச்சைக்குள்ளாகிவிடும் என்பதால் அபிராமி சைலன்ட் மோடுக்கு சென்று விட்டார்.
தொடர்ந்து அபிராமியின் இந்த பேச்சுகளுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் தரப்பிலிருந்து கண்டனங்களை தெரிவித்தனர். அபிராமி தெரிவித்த சில கருத்துக்கள் me too-வையும் பாடகி சின்மயியையும் தாக்கி பேசும் வகையில் இருந்தது. அதனால் சின்மயியும் தன் பங்கிற்கு அபிராமியை ட்விட்டரில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். உண்மை காலதாமதமாக தெரிய வந்தாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பவில்லை என்றால் அது பொய் என மாறிவிடாது என்று தெரிவித்து, அபிராமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லாமல் திரை உலகில் ஆண்களும் பெண்களும் தன்னை பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி பேசுவது வழக்கமாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரபலங்களின் பதிலடி
இதில் சக பிக் பாஸ் புகழ் vj மகேஷ்வரி தன் பங்கிற்கு கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்தால் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நம்ம பெண்களாக பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கத்துல தான் நிற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டியும் தன் பங்கிற்கு காட்டமான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அபிராமி நீங்க ஒரு பக்கமா இருக்கீங்க, உங்களுக்கு உண்மை என்னன்றது தெரியாது, 89 வருஷம் ஆகும் நீங்க அங்க இல்ல, எத வச்சு அந்த ஆசிரியர்கள் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை பண்ணிருக்கவே மாட்டாங்க நீங்க உத்தரவாதம் கொடுக்குறீங்கன்னு கேள்வி எழுப்பி இருக்காங்க.
முன்னாள் மாணவி கருத்து
முக்கியமாக பார்த்தோமானால் அபிராமியை பொறுத்த வரைக்கும் தான் கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவி என்ற அடிப்படையிலேயே இந்த விவகாரத்தில் அவர் கருத்து தெரிவித்து வருகிறார் அப்படி பார்த்தோம் என்றால் 2006 இல் கலாக்ஷித்ராவில் பயின்று தற்போது பிரபல நடிகையாகவும் பாஜக பிரமுகராகவும் இருக்கும் ஜெயஸ்ரீ ராவ் தான் கலாக்ஷித்ராவில் படிக்கும் போது ஹரிபத்மன் இருந்ததாகவும் ஆனால் அந்த துன்புறுத்தல்கள் என்பது வேறு ஒரு ஆசிரியரால் மாணவிகளுக்கு நடந்ததாகவும் அந்த நேரத்தில் அவர்கள் இதனை வெளியில் சொல்ல பயந்ததாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தன்னையே ஒரு ஆசிரியர் "லாங் டிரைவ் செல்லலாமா" என்று அழைத்ததாகவும் அதிலிருந்து தான் தப்பி விட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இப்படியாக கலாக்ஷித்ராவின் முன்னாள் மாணவிகள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா??? பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | இளைஞர்களே உஷார்! இன்ஸ்டாவில் நிர்வாண படத்தை அனுப்பி பணம் பறிக்கும் பெண்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ