சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன?

Chennai Big Basket Delivery Boy Sexual Assault: சென்னை அருகே பட்டப்பகலில், வீட்டு ஹாலில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு, பிக் பாஸ்கட் டெலிவரி பாய் பாலியல் தொந்தரவு அளித்ததாக ட்விட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2023, 04:32 PM IST
  • டெலிவரி ஊழியர் குறித்த விவரங்களை அந்நிறுவனம் தர மறுத்துள்ளது.
  • தொடர்ந்து, இளம்பெண் போலீசாரிடம் புகாரளித்தார்.
  • இதையடுத்து, போலீசார் நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் தகவல்.
சேட்டை செய்த டெலிவரி பாய்... பொங்கி எழுந்த சின்மயி - நடந்தது என்ன? title=

Chennai Big Basket Delivery Boy Sexual Assault: சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், டெலிவரி ஊழியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக இன்று அதிகாலையில் ட்விட்டர் மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த ட்வீட் மீது சென்னை காவல் துறை பதிலளித்துள்ள நிலையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி அந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து, அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும், இச்சம்பவம் சென்னையில், நேற்று (ஏப். 5) மதியம் 1.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சார்ந்த சிசிடிவி வீடியோ ஆதாரமும் தன்னிடம் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சின்மயி ட்வீட் செய்துள்ளார். 

சமையலறைக்குள் நுழைந்த டெலிவரி பாய்

அந்த இளம்பெண் ட்விட்டரில் கூறியதாவது,"என் தோழி இரண்டு நாள்களுக்கு முன் 'பிக் பாஸ்கெட்' ஆன்லைன் டெலிவரி தளத்தில் மளிகை பொருள்களை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து, இன்று (அதாவது நேற்று, ஏப். 5) ஆர்டர் டெலிவரி செய்தனர். அப்போது டெலிவர் ஊழியர் வந்தார். நான் அவரை மளிகை பொருள்களை கதவு அருகில் உள்ள நாற்காலியில் வைத்துவிட்டு, செல்லுமாறு கூறினேன். அந்த ஹாலில் நான் மட்டுமே இருந்தேன். 

அப்போது, அவர் எனது அனுமதியின்றி சமையலறை வரை வந்தார். நான் அவரை ஹாலில் பொருள்களை வைக்கும்படி கூறினேன். அவர், பரவாயில்லை மேடம், நான் சமையலறையிலேயே வைக்கிறேன் என்றார். நான் உடனே சமையலறைக்கு ஓடினேன், பொருள்களை வைத்துவிட்டு உடனே செல்லுங்கள் என்றேன். 

அச்சமடைந்த பெண்

ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. என் அருகில் வந்து, எனது தோள்களை பற்றி மேலும் நெருங்கி வர முயன்றார். நான் சற்று பயந்து, அங்கிருந்து ஓடி ஹாலுக்குச் சென்றேன். கதவை திறந்து அவரை வெளியேபோகும்படி சத்தம்போட்டேன். அவர் ஹாலுக்கு வந்து, பிரதான கதவை அடைத்தார். 

மேலும் படிக்க | 'நான் கத்தினேன், அவன் இளித்தான்' - இரவில் சென்னை மாணவிக்கு நேர்ந்த கொடுமை - ஆட்டோ ஓட்டுநர் கைது

தொடர்ந்து, என் அருகில் வர முயன்றார். மேலும், அவர்,'மேடம், எனக்கு உங்களின் நம்பரை கொடுங்கள், நான் சென்றுவிடுகிறேன்' என்றார். 20 முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் அந்த நபர், அதையே கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவரிடம் தொடர்ந்து, சத்தம் போட்டு வந்தேன். வெளியே கேமரா இருக்கிறது, வெளியே செல்லுங்கள். மற்றொரு அறையில் என் தோழி இருக்கிறாள், காவல்துறையை அழைப்பேன் என்றேன். 

மீண்டும் மீண்டும்... போன் நம்பர்!

ஆனால், அதை எதையும் அவன் சிறிதும் கவனிக்காமல், மீண்டும் மீண்டும் என் போன் நம்பரையே கேட்டார். கடைசியில் என் தோழிக்கு போன் செய்து உததவிக்கு அழைத்தேன். அவர் அதை பார்த்து, சிறிதுவிட்டே வெளியே சென்றார். உண்மையாக, எனக்கு என்ன நடக்கிறது என ஒன்றேமே புரியவில்லை. ஒரு பெண் தனியாக இருக்கும்போது டெலிவரி ஊழியர் எப்படி இப்படி நடந்து கொள்வார்.

இந்த சம்பவம் குறித்து, புகாரளிக்க உடனடியாக பிக் பாஸ்கட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், அவர்கள் அந்த நபரை விசாரித்து, அவரை பணியில் இருந்து நீக்குகிறோம் என என்னிடம் சொன்னார்கள். காவல் நிலையத்தில் புகாரளிக்க அந்த டெலிவரி ஊழியரின் போன் நம்பர் மற்றும் பெயர் வேண்டும் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் பெயரை மட்டுமே சொன்னார்கள், போன் நம்பர் உள்ளிட்ட வேறு எந்த விவரமும் இல்லை!

சரியாக பதிலளிக்காத பிக் பாஸ்கட்

5 வெவ்வேறு லெவல் எக்சிகியூட்டிவ்களிடம் பேசியும், அனைவரும் ஒரே மாதிரி பதிலளித்தனர் "நிறுவனக் கொள்கையின்படி டெலிவரி பார்ட்னரின் மொபைல் நம்பரை நாங்கள் வெளியிடக்கூடாது" என்றனர். நான் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கூறுகிறேன், என்ன நடந்து என அனைத்தையும் கூறினேன். இருப்பினும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை.

மேலும் சமூக ஊடகங்கள் அல்லது ட்விட்டரில் எதையும் பகிர வேண்டாம், காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என என்னிடம் கூறினர். அவர்கள் நிறுவனத்திற்குள்ளேயே கடும் நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். என்னால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது! காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளேன். 

காவல் துறை ட்வீட்

பிக் பாஸ்கட் டெலிவரி ஊழியர் மீது போலீஸில் வழக்கு பதிவு செய்ய உள்ளேன். டெலிவரி பொருள்களை வாங்கும் அனைவரும் குறிப்பாக பெண்கள் மிக கவனமாக இருங்கள்" என ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவரது அதிகாலையை ட்வீட்டுகளை அடுத்து, சென்னை பெருநகர காவல்துறையினரும் பதிலளித்தனர். 

போலீஸார் ட்வீட்டில்,"இந்த விஷயத்தில் பெருநகர சென்னை காவல்துறை உங்களுக்கு உதவும். உங்கள் தொடர்பு எண்ணை மெசேஜில் பகிரவும். எங்கள் குழு உங்களுக்கு உதவும். பயப்பட வேண்டாம். உடனடி உதவிக்கு l00-ஐ அழைக்கவும். இந்த அவசர காலங்களில் Kaaval Uthavi SOS செயலியை பயன்படுத்தவும். copsmlchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் நீங்கள் விவரங்களை அனுப்பலாம்" என ட்வீட் செய்துள்ளது.

மேலும் படிக்க | விடுதலை படத்தை குழந்தைகள் பார்க்கலாமா... ரோகிணி தொடர்ந்து அடுத்த பிரச்னை - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News