தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பில், 'விக்ரம்', 'நட்சத்திரம் நகர்கிறது' படங்கள் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது. அதற்கு பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி' என்பது குறிப்பிடதக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. 


மேலும் படிக்க | திடீர் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து! ஏன் தெரியுமா?


தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும்  அட்டகாசமான திரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது. 



இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில்  நடித்துள்ளனர்.


சென்னை, பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது.  விரைவில் டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு அறிவிப்புகள் வெளியாகும். 


மேலும் படிக்க | ருத்ரன் படத்தின் ருத்ரதாண்டவம்... முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ