தமிழக முதல்வரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்?- கமல் கேள்வி

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை டிவிட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.
இந்த வகையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
"ஒரு மாநிலத்தில் நடந்த துர்சம்பவத்துக்கும் ஊழலுக்கும் அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் எனக் கட்சிகள் கோருகிறது என்றால் தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என எந்தவொரு கட்சியினரும் கோராதது ஏன்? தமிழக முதல்வரின் ராஜினாமாவைக் கோரும் அளவுக்கு இங்கு குற்றங்கள் நடந்திருக்கின்றனவே?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனது இலக்கு தமிழகம் சிறப்பாக இருக்க வேண்டும். எனது குரலுக்கு வலுசேர்க்க யாருக்கு துணிச்சல் இருக்கிறது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக இருக்க வேண்டும். இவைகள் மழுங்கிப் போயிருந்தால் வேறு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.