கமல் எனக்கும்தான் கிஃப்ட் கொடுத்தார் - விஜய் சேதுபதி விளக்கம்
விக்ரம் படத்தில் நடித்ததற்காக கமல் ஹாசன் தனக்கும் பரிசளித்ததாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர்தான் விஜய் சேதுபதியையும் திரையுலகுக்கும் அறிமுகப்படுத்தியவர். இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறை இணைந்து மாமனிதன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
சீனுராமசாமியும், விஜய் சேதுபதியும் மீண்டும் இணைந்திருப்பதாலும், இளையராஜா - யுவன் சேர்ந்து இசையமைத்திருப்பதாலும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கும் இப்படமானது நீண்ட நாள்களுக்கு பிறகு ஜூன் 24ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கிறது. படத்தை ஆர்.கே. சுரேஷ் வெளியிடுகிறார்.
இந்நிலையில் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது விஜய் சேதுபதியிடம், விக்ரம் படத்தில் நடித்ததற்காக கமல் ஹாசன் ஏதேனும் பரிசு கொடுத்தாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி கமல் சாருடன் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். கற்பனையில்கூட கமல் சாருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை என பதிலளித்தார்.
அனிருத்திடமும் சில நாள்களுக்கு முன்பு கேட்கப்பட்ட இதே கேள்விக்கு அவரும் இதே பதிலை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விக்ரம் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து உற்சாகமான கமல் ஹாசன் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரும், சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சும், லோகேஷின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு அப்பாச்சி பைக்கும் பரிசாக அளித்திருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR