சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2ம் பாகத்தை தொடந்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தற்போது அவர் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து இயக்குவது பற்றி ஆலோசிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


இதன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இதில் போற்றி பாடடி பெண்ணே, வானம் தொட்டு போனா, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகி ஆகிய இனிமையான பாடல்களும் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிட்டத்தக்கது.