பிக்பாஸ் சீசன் 5 -ஐ தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 60 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, நிரூப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போல் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுடன் கலந்துரையாடி வந்த கமல்ஹாசன், இப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | நீங்கள் வெர்ஜினா? ரசிகரின் கேள்விக்கு யாஷிகாவின் வேற லெவல் பதில்!


விக்ரம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால் பிக்பாஸ் மற்றும் விக்ரம் சூட்டிங் என இரண்டுக்கும் நேரம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முக்கியமான நடிகர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதால், பிக்பாஸ் அல்டிமேட் சீசனில் இருந்து விடை பெறுவதாகவும், இது தற்காலிமான இடைவெளி என்றும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் அனைவரையும் சந்திப்பதாக கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார்.



பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவுக்கு விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கமல்ஹாசன் கூறியுள்ளார். வாரம்தோறும் மக்களுடன் உரையாடும் வாய்ப்பு இதன்மூலம் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இனி அந்த உரையாடல் இல்லை என்பது வருத்தத்தை கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். கமல்ஹாசன் விலகியுள்ளதால், புதிய தொகுப்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் சிகிச்சை பெற்றபோது ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனால், அவரே மீண்டும் தொகுத்து வழங்குவாரா? அல்லது வேறு யாரேனும் வருவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 


மேலும் படிக்க | நீ ஒன்னும் பிக்பாஸ் இல்ல ! வனிதா-பாலா இடையே வெடிக்கும் சண்டை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR