இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செம்பி’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசனும் ‘செம்பி’ டிரெய்லரைப் பார்த்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை கோவை சரளாவையும், கமல்ஹாசன் வெகுவாக பாராட்டியுள்ளார். செம்பி படத்தில் நடித்த கோவை சரளாவை நடிப்பு ராட்சசி என புகழாரம் சூட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரஜினிக்காக சிவகார்த்திகேயன் செய்யப்போகும் சம்பவம்..! - இந்த தடவையும் ஹிட்தானாம்!


செம்பி ரிலீஸாக இருக்கும் நிலையில், பிரபு சாலமன் உள்ளிட்ட படக்குழுவினர் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். அப்போது, விக்ரம் படத்தின் வெற்றிக்காக வாழ்த்துகளை கூறிய அவர்கள், செம்பி படத்தின் கதை உள்ளிட்ட அம்சங்களையும் கமலிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டுக்கொண்ட கமல், செம்பி படத்துக்காக தன்னுடைய வாழ்த்துகளை கூறியுள்ளார். கமல்ஹாசனுடனான சந்திப்பில் தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன் ரியா, இயக்குனர் பிரபு சாலமன், நடிகை கோவை சரளா, நடிகர் அஷ்வின் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 



செம்பி படத்தின் கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால், மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என நம்புவதாக கமல் கூறியுள்ளார். இதனைக் கேட்டு படக்குழுவினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செம்பி படத்தின் டிரெய்லர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. முக்கிய கதாப்பாத்திரங்களில் அஸ்வின்குமார், கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவை சரளா 90 வயது பாட்டியாக நடித்திருக்கிறார். தம்பி ராமையா பஸ்கண்டக்டிராக நடித்திருக்கிறார்.  


மேலும் படிக்க | விதிப்படிதான் எல்லாம் நடக்கும்... கண்ணீர் மல்க பேட்டியளித்த டி.ராஜேந்தர்!