மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய மூன்று படங்களின் தொடர்ச்சியான வெற்றிக்கு பிறகு கமலை வைத்து லேகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் ஒரு ரசிகனாக கமல் ஹாசனை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் எனவும், கமலின் முந்தைய படமான விக்ரமையும், தனது முந்தைய படமான கைதி படத்தையும் இந்த விக்ரமில் லாவகமாக இணைத்திருக்கிறார் எனவும் பலர் புகழ்ந்துவருகின்றனர்.


மேலும் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர் என்ற நிலைக்கு இப்படம் மூலம் லோகேஷ் நகர்ந்திருக்கிறார் என திரையுலகினர் கூறுகின்றனர்.



அதுமட்டுமின்றி தனது முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை ஒரே படத்தில் அவர் இணைத்திருப்பதன் மூலம் லோகேஷ் யுனிவெர்ஸ் என்ற சொல்லாடலும் உருவாகியிருக்கிறது.


படமும் மெகா ஹிட் ஆகியுள்ளது. இதுவரை விக்ரம் படமானது 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இதனால் உற்சாகமான கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் காரும், லோகேஷின் உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு இரு சக்கர வாகனமும், சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்சும் கிஃப்ட் செய்து அசத்தினார்.



இந்நிலையில் விக்ரம் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து கமல் ஹாசன் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழர்கள் இல்லாத நாடில்லை. தமிழோசை ஒலிக்காத ஊரில்லை எனும் அளவிற்கு உலகம் முழுக்க பரந்து விரிந்திருக்கும் உலகத் தமிழ் சொந்தங்களுக்கு என் வணக்கம்.


மேலும் படிக்க | 40 வருஷத்துக்கு முன்னாடியே வந்த கமல்ஹாசனின் Multiverse மூவி!- என்ன படம்னு தெரியுமா?!


திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த பிரமாண்டமான வெற்றியை எனக்கு பரிசளித்த தொப்புள்கொடி உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


 



சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து எண்டெர்டெயின் செய்வதுதான் நான் உங்களுக்கு செய்யக்கூடிய பதில் நன்றி என்பதை நான் அறிவேன். அதை செய்வேன். நன்றி” என பேசியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களீல் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | கல்யாணத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவனிற்கு நயன்தாரா அளித்த பரிசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR