கோலிவுட்டில் புகழ்பெற்ற நடிகரான நாகேஷ் (Nagesh), பல படங்களில் தனது அசத்தலான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தார். இவர் நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய் மேடையில் குதித்ததால், 'தை நாகேஷ்' என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றி படித்ததால், இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.


 


ALSO READ | லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்?


1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இவருடன் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.


கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்.


திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.


நீர்க்குமிழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 


அந்தவகையில் மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் 87வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு பிறகு நாகேஷ் உடன் மிகவும் நெருக்கமாக பழகியது கமல்ஹாசன் தான். 


இந்நிலையில் இன்று நாகேஷின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) ட்வீட் பதிவு செய்துள்ளார். அதில்.,


"நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்." என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நாகேஷை மறக்காமல் நினைத்துள்ளார்.


 



 


கமல்ஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் இவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமல்ஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நாகேஷ் கமல்ஹாசனுடன் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்.


 


ALSO READ | எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல ஆண்டுகளாக எனது குரலாக இருந்து வருகிறார்: ரஜினிகாந்த்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR