நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் சளி, இருமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் டெஸ்ட் எடுத்திருக்கிறார்.அப்போது அவருக்கு கோவிட் (Coronavirus) தொற்று உறுதியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருந்தது. அத்துடன் அவருக்கு தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். 


ALSO READ | கமல் ஹாசனின் தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை விளக்கம்


இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியை (Bigg Boss Tamil 5) கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், கமல் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை சுவாரசியமாக தொகுத்து வழங்கவில்லை என்று பலரும் புலம்பினர். இதனால் மீண்டும் எப்போது வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.




இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவரே பதிவிட்டும் உள்ளார். தனது அப்பதிவில் அவர், முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


 



 


எனவே நடிகர் கமல்ஹாசன் இன்று நடைபெற இருக்கும் சூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ALSO READ | கமல்ஹாசனுக்கு கோவிட் தொற்று உறுதி!  அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல் ட்வீட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR