Bigg Boss-லிருந்து விலகி விட்டாரா கமல்? கமலுக்கு பதில் இனி இவரா?
கமல்ஹாசன் பிக் பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளில் மிகவும் பிஸியாகி இருப்பதே இதற்குக் காரணம் என தெரிகிறது.
சென்னை: Bigg Boss இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். தமிழ், இந்தி என பல மொழிகளிலும் சக்கைப் போடு போடும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தி மொழியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரியாலிடி நிகழ்ச்சி மக்களைக் கவர்ந்து வருகிறது. இந்தி பிக் பாஸ் சீசன்களில் பெரும்பாலானவற்றை தொகுத்து வழங்கியவர் சல்மான் கான்.
தெலுங்கு பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று தொகுப்பாளர்கள் மாறியுள்ளனர். தமிழில், முதல் சீசன் முதலே கமல்ஹாசன் இதை மிக அருமையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
ALSO READ: கர்ணன் பட டீஸர் வெளியான 3 மணி நேரத்தில் 2 மில்லியன் பேர் பார்த்து சாதனை
கமல்ஹாசன் (Kamal Haasan) பிக் பாஸின் அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளில் மிகவும் பிஸியாகி இருப்பதே இதற்குக் காரணம் என தெரிகிறது.
அரசியல் பணிகள் மட்டுமல்லாமல், அவரது சில திரைப்பட பணிகளும் பாதியில் உள்ளன எனத் தெரிகிறது. அவர் விக்ரம் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்களின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும். அரசியல் பணிகளும் அவருக்கு ஏராளமாக உள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அவர் தனது கட்சிப் பணிகளில் இன்னும் அதிக நேரம் செலவழிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
ஆகையால், அரசியல் பணிகளுக்கும் திரைப்படங்களுக்கும் முன்னுரிமை அளித்து, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒதுக்கக்கூடும் என தெரிகிறது.
ஆகையால், Bigg Boss season 5-ஐ கமல்ஹாசன் தொகுத்து வழங்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு பதில் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடும் என்பது பற்றிய ஊகமும் வலுக்கத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசனுக்கு பதில் சிம்பு (Simbu) பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கூடும் என கூறப்படுகின்றது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வரவில்லை.
ALSO READ: அசத்தும் அசுரன்: வாங்கிய விருதுக்கு உருகி உருகி நன்றி கூறிய தனுஷ்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR