சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளன. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இன்றிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் செயல்முறையும் தொடங்கியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியிலிருந்து போட்டியிடவுள்ளார்.
மறைந்த தனது தந்தை ஸ்ரீநிவாசனை நினைவுகூர்ந்த கமல்ஹாசன் (Kamal Haasan), தனது தொகுதி மக்கள் தனக்கு வாக்களித்து, சட்டசபையில் தனது கருத்துக்களை முன்வைக்க உதவுவார்கள் என தனக்கு நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்தார். "நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி பின்னர் அரசியலில் நுழைய வேண்டும் என்பதே எனது தந்தையின் கனவாக இருந்தது. நான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற அவரது கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், எனது கட்சியில் பல முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளார்கள். இது எங்களுக்கு ஒரு பெருமையான தருணம்," என்று அவர் கூறினார்.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் நடக்கும் தேர்தல் போட்டி சுவாரசியம் மிக்கதாக இருக்கும். ஏனெனில், மாநிலத்தில், பாஜக-வும் (BJP) காங்கிரசும் நேருக்கு நேர மோதிக்கொள்ளும் ஐந்து தொகுதிகளில் அதுவும் ஒன்றாகும்.
ட்விட்டரில் இது குறித்து தெரிவித்த கமல்ஹாசன், “கோயம்பத்தூர் தெற்கு தொகுதிக்கான போட்டியில், மண், மொழி மற்றும் தமிழக மக்களுக்கான போரை நான் பார்க்கிறேன். இதை வெல்லப்போவது நானல்ல, தமிழகம்” என்று எழுதியுள்ளார்.
மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021
ALSO READ: தமிழக சட்டமன்றத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வெள்ளிக்கிழமை சென்னையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தனது கட்சியின் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலையும் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.
முன்னதாக, தமிழகத்தின் வெவ்வேறு தொகுதிகளுக்கான 70 வேட்பாளர்களின் பெயர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டது.
பாஜகவும் காங்கிரசும் இன்னும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தற்போது கோயம்பத்தூர் தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் நிற்கவுள்ள நிலையில், மக்கள் எந்த பக்கம் தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என்பதைக் காண்பது சுவாரசியமாக இருக்கும்.
ALSO READ: சட்டப்பேரவைத் தேர்தல் - 2021 பா.ம.க மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR