சென்னை: சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக பதில் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து டுவிட்டர் மூலம் குரல் கொடுத்து வந்தார். போராட்டத்திற்கும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். 


போராட்டம் நடைபெற்ற போது பொதுமக்களை முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கமலின் இந்த கருத்து முட்டாள்தனமானது என சுப்பிரமணியன்சுவாமி கூறியிருந்தார்.


இந்நிலையில் டிவிட்டரில் சுப்பிரமணிய சுவாமி கூறிய கருத்துகளுக்கு, நடிகர் கமல்ஹாசன் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.


சுப்பிரமணிய சுவாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இப்போராட்டம் நடைபெறும் போது தமிழர்களை பொறுக்கிகள் என கடுமையாக சாடினார். இவருடைய பெயரைக் குறிப்பிடாமல் "ஆம். நான் தமிழ் பொறுக்கி தான். எங்கே பொறுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். என்று ஒளிப்பதிவாளர் இணையதளத் தொடக்கவிழாவில் கமல் தெரிவித்தார்.


இப்போராட்டம் தொடர்பாக சென்னையில் நேற்று கமல் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார். தன்னுடைய பேச்சில், "முதல்வர் போராட்டக்காரர்களை சந்தித்து பேசியிருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி, "போராட்டக்காரர்களை முதல்வர் நேரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என கமல்ஹாசனைப் போன்ற சினிமாக்காரர்கள் கூறுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்று கூறி இருந்தார். 


இதற்கு பதிலடியாக கமல் தன்னுடைய டிவிட்டர் பதிவில்:-


'ஹாய் சாமி. நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ் சீஸரும் கூட மக்களிடம் பணிவாகதான் இருந்தார்கள். அப்படியிருக்கையில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?' என அதிரடியாக பதில் அளித்துள்ளார்.