இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உலகம் முழுக்க நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காயத்ரி உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. கமலுக்கு நீண்ட நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுக்க ஒட்டுமொத்தமாக 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களில் வெளியாகியுள்ளதாம் விக்ரம். பான் இந்தியா ரிலீஸாக வெளியாகியுள்ள இப்படம் இந்தியில் 1500க்கும் அதிகமான திரையரங்குகளிலும் மலையாளத்தில் 400க்கும் அதிகமான திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | ‘விக்ரம்’ படம் பார்த்த நடிகர் அஜித் குடும்பம்!- வைரல் புகைப்படங்கள்!


 


அதன்படி இப்படம் ரிலீஸான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளதாம். தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது  இந்தி மற்றும் வெளிநாடுகளிலும் இப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் இப்படம் இன்னும் ஓரிரு நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் எனக் கூறப்படுகிறது. அதேபோல கமலின் கரியரில் அதிக வசூல் செய்த படமாகவும் இது அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR