‘விக்ரம்’ படம் பார்த்த நடிகர் அஜித் குடும்பம்!- வைரல் புகைப்படங்கள்!

நடிகர் கமல்ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் திரைப்படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் அஜித்தின் குடும்பம் கண்டுகளித்துள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jun 4, 2022, 01:58 PM IST
  • நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.
  • சென்னையில் விக்ரம் படம் பார்த்த நடிகர் அஜித்தின் குடும்பம்.
  • கமல்ஹாசன், உதயநிதியும் தியேட்டரில் படத்தைப் பார்த்தனர்.
‘விக்ரம்’ படம் பார்த்த நடிகர் அஜித் குடும்பம்!- வைரல் புகைப்படங்கள்! title=

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உலகம் முழுக்க நேற்று வெளியாகியுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் கமலின் படம் எனும்  காரணத்தால் இப்படத்தைப் பார்க்க மக்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என லோகேஷ் கனகராஜ் இயக்கிய 3 படங்களுமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றதால் இந்தப் படத்துக்கும் அதேபோல எதிர்பார்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் எனும் காரணத்தாலும் இப்படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்துவருகிறது.

தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் விக்ரம் திரையிடப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைப் பிரபலங்களும் இப்படத்தைக் கண்டுவருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, தனது மகள் அனொஷ்காவுடன் விக்ரம் படத்தைக் கண்டுகளித்துள்ளார்.

மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?

 

shalini ajith
சென்னையில் உள்ள பிரபல திரையரங்குக்கு வந்த அவர்கள் படத்தைப் பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன. நடிகர்கள் கமல்ஹாசன், நரேன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் உதயநிதி உள்ளிட்டோரும் இப்படத்தைக் கண்டுகளித்துள்ளனர்.

மேலும் படிக்க | அட்லி இயக்கும் ஷாருக்கான் படம் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ படத்தின் காப்பியா?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News