`எனது தேசப்பற்றை சோதிக்க வேண்டாம்`- கமல் டிவிட்
திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 23-ம் தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அமைக்கப்பட்டது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எழுந்து நின்று தேசப்பற்றை நிரூபிக்க வேண்டியது அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தனர்.
அந்த வகையில் தற்போது இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளா. அதில்,
சிங்கப்பூரில் அந்நாட்டு தேசிய கீதம் தினமும் நள்ளிரவில் பாடப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பலாம். எனது தேசப்பற்றை சோதிக்க எல்லா இடங்களிலும் தேசிய கீதத்தை பாடச் சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்.
இவ்வாறு கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.