லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி இன்றுவரை பல திரையரங்குகளை ஆக்கிரமித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'.  பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது.  திரையரங்குகளில் இப்படத்தை கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில் 'விக்ரம்' படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கலகலப்பாக நடைபெற்ற தி வாரியர்ஸ் பிரஸ்மீட்டில் கண்கலங்கிய லிங்குசாமி


அடுத்ததாக பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி, ஜெய் ஆகியோரது நடிப்பில் ஜூன்-24ம் தேதி வெளியான த்ரில்லிங் திரைப்படம் 'பட்டாம்பூச்சி'.   இந்த படத்தில் ஜெய் ஒரு சைக்கோ கொலைகாரனாகவும், சுந்தர்.சி போலீசாகவும் நடிக்கிறார்.  இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் ஹனி ரோஸ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற இப்படம் இன்று சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.  ஹர்ஷா இயக்கத்தில் ஷிவா ராஜ்குமார் நடிப்பில் வெளியான ஆக்ஷன் கலந்த ஃபேண்டஸி திரைப்படம் 'பஜ்ராங்கி-2'.   இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.  



மதுக்குட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாள மொழியில் வெளியான ரொமான்டிக் காமெடி படம் 'குஞ்செல்தோ'.  இந்த படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.  ரிஷிகேஷ் இயக்கத்தில் கன்னட மொழியில் உருவான த்ரில்லிங் திரைப்படமான 'இந்திரா' இன்று வூட் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.  அதனைத்தொடர்ந்து இன் எனும் மலையாள திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.   ஜூலை 10ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் டியர் ஃப்ரண்ட் மற்றும் 'அன்டெசுந்தரனிக்கி' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. 


மேலும் படிக்க | AK61 அப்டேட்: ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR