நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர்'' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் நினைவேந்தல் கூட்டம் இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.


இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷ்ராஹாசன், சுஹாசினி, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். 


நினைவேந்தல் கூட்டம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியது:-


நான் பார்த்த மனிதர்களில், கமல்ஹாசன் மிகப் பெரிய கோபக்காரர். அவரை சந்திரஹாசன் அண்ணன்தான் வழிநடத்துவார். பாலச்சந்தர், அனந்து, சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர், கமலின் உயிர்கள். அதில் மூன்று பேர் உயிருடன் இல்லை. இருப்பினும் அவர்களுடைய ஆன்மா கமலை வழிநடத்தும். சந்திரஹாசன் இல்லாமல், கமல் இனி எப்படி இருப்பார் என்று தெரியவில்லை, அதைப்பற்றி தான் நான் அதிகம் கவலைப்படுகிறேன் என அவர் கூறினார்.


அவரைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் பேசியதாவது:-


'என் அண்ணன் சந்திரஹாசனின் அறிவுரை இல்லாமல் நான் நடத்தும் முதல் நிகழ்ச்சி இது. அவர்தான், என் வாழ்நாள்களில் எனக்கான வழிகாட்டியாக இருந்தார். அவர், எனக்கு மரியாதையாக நடந்துகொள்ளக் கற்றுக்கொடுத்தவர். அவர், ஒருவரையும் ஒருமையில் அழைக்க மாட்டார். அவர் இல்லையென்றாலும் அவருடைய குரல் எனக்குக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அந்தக் குரல் என்னை வழிநடத்தும்' என்றார்.