லோகேஷ் கனகராஜ் கைவண்ணத்தில், கமல், விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர்களின் மிரட்டலான ஆக்ஷனில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடைபோட்டு ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம்.  கமல்ஹாசனின் கரியரில் இது ஒரு மிகசிறந்த பிளாக்பஸ்டர் படமாக அமைந்து இருக்கிறது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றியினை பெற்றது.  படம் வெற்றிபெற்றதற்காக நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் லோகேஷுக்கு விலையுயர்ந்த காரை பரிசாக கொடுத்து அசத்தினார்.  தற்போது இயக்குனரும், படக்குழுவினரும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.  இப்படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அரசியலிலிருந்து விலகும் கமல்ஹாசன்? - Press Meet-இல் சொன்னது என்ன?!


இதற்கிடையில், 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் இளமையான தோற்றத்தில் சில காட்சிகளில் வருவார் என்று படம் வெளியாவதற்கு முன்பு சில செய்திகள் வெளியானது.  அதற்காக தயாரிப்பாளர்கள் வயதான விஎஃப்எக்ஸ் நுட்பத்தை தேர்வு செய்தனர், படத்தில் கமலை முப்பது வயது நபராக மாற்றும் தொழில்நுட்பத்திற்கு படக்குழு பத்து கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் சில தகவல்கள் வெளியானது.  ஆனால் வெளியான செய்திகளின்படி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் கூட கமல் இளம் வயது தோற்றத்தில் இருக்கும் காட்சிகள் இடம்பெறவில்லை.



எடிட் டேபிளில் இந்த காட்சிகள் கட் செய்யப்பட்டதாக சில வதந்திகள் பரவிய நிலையில், லோகேஷ் கனகராஜ் தற்போது இதுகுறித்த உண்மையான தகவலை கூறியுள்ளார்.  அவர் கூறுகையில், 'விக்ரமின் வயது முதிர்வு தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.  அதனை முழுமையாக செய்து முடிக்க இன்னும் 6 மாதங்கள் அவகாசம் தேவை, அதனால் திரையரங்கு வெளியீட்டிற்கு அந்த காட்சிகளை அகற்ற வேண்டியிருந்தது.  இருப்பினும் அந்த காட்சிகளை நிச்சயமாக நீங்கள் டிஜிட்டல் ஊடகம் வாயிலாக காணலாம்' என்று கூறினார்.  மேலும் பேசுகையில், 'விக்ரம்' படத்தின் அன் கட் வெர்ஷன் சுமார் 4 மணி நேரம், தியேட்டர் வெர்ஷன் வெறும் 2 மணி நேரம் 57 நிமிடம் என்றும் நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.  எங்கள் குழு நிச்சயம் நீக்கப்பட்ட காட்சிகளை பிரத்தியேகமாக ஆன்லைனில் வெளியிடும் என்று கூறினார்.  அதனைத்தொடர்ந்து ரசிகர்களிடம் ட்விட்டரில், விக்ரம் படத்தின் பிடிஎஸ் வீடியோக்களை படம் வெளியான 26-ம் நாளில் வெளியிட இருப்பதாகவும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | சிம்பு திருமணம் எப்போது? எதிர்பார்க்கும் ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR