“தலைவி” படத்தில் ஜெ-வாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

“தலைவி” படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தலைவர் ஜெ.ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
“தலைவி” படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தலைவர் ஜெ.ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி' என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கு 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இணை கதாசிரியராக பணிபுரியவுள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.
மதன் கார்க்கி பாடல்கள் எழுத, விப்ரி மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஜெயலலிதா வாழ்க்கைப்படம் எடுப்பதற்காக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் முறையாக தடையில்லா சான்றிதழும் பெற்றுள்ளது படக்குழு. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இந்த படத்தை பற்றிய புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். “தலைவி” படம் ஹிந்தியில் உருவாக இருப்பதாகவும், அவர் இசையமைக்க பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த தலைவர் ஜெ.ஜெயலலிதாவாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.