பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், பாபி தியோல். இவர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, ‘கங்குவா’ படத்திலும் இவர் வில்லனாக நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா படத்தில் பாபி தியோல்..


சிறுத்தை சிவா, பெரிய பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன்-ஃபேண்டசி த்ரில்லராக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். 


பிரபல பாலிவுட் நடிகர் சன்னி டியோலின் சகோதரர், பாபி டியோ. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான அனிமல் படத்தில் இவர் மாஸ் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது இன்ட்ரோ காட்சியின் போது வரும் பாடல் தற்போது வரை இணையத்தில் வைரலாகி வருகிறது. 55 வயதாகும் இவர், இன்னும் தன் உடலை ஃபிட்டாக, கட்டுமஸ்தாக வைத்துக்கொண்டு பல இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இவருக்கு நேற்று முன் தினம் பிறந்தநாள். இதையொட்டி, கங்குவா படக்குழு அவருக்கான ஸ்பெஷல் போஸ்டரை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது. 



செல்பி எடுத்த ரசிகை செய்த காரியம்..


பாபி டியோலிற்கு, ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் பட்டாளம் அதிகமாக உள்ளது. இவரை எங்கு, எப்போது பார்த்தாலும் அவரை சூழ்ந்து கொண்டு ஒரு செல்ஃபி எடுக்க வேண்டும் என்று அன்போடு ரசிகைகள் கேட்டுக்கொள்வார்கள். அதற்கிணங்கி இவரும் போட்டோ எடுத்துக்கொள்வார். 


மேலும் படிக்க | Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!


சில நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் முடித்து திரும்புகையில் அவரிடம் வந்த ஒரு ரசிகை “சார் சார் ஒரே ஒரு செல்ஃபி என்றார்..” பாபி டியோலிற்கு அருகில் இருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகையை ஏதோ சொல்ல முற்பட அதற்கு இவர், “விடுங்க விடுங்க” என்பது போல் செய்கை காட்டுகிறார். அந்த ரசிகை போனை அன்லாக் செய்து விட்டு பாபி டியோலின் கையில் கொடுத்து செல்பி எடுக்க கூறுகிறார். அவர் செல்பி எடுத்து கொண்டிருக்கையில் பாபி டியோலின் கன்னத்தில் ‘நச்’சென ஒரு ‘இச்’ வைத்தார் அந்த ரசிகை. 



பாபி டியோலின் ரியாக்ஷன்..


ரசிகை தன் கன்னத்தில் முத்தமிட்டவுடன் பாபி தியோல் முகம் சுழிப்பார் அல்லது திட்டிவிட்டு கிளம்புவார் என்று பார்த்தால், அவர் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த ரசிகை முத்தமிட்டவுடன், பாபி தானது புருவங்களை உயர்த்தி மகிழ்ச்சியுடன் ஆச்சரியம் கலந்த ரியாக்ஷன் காெடுத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நெட்டிசன்கள் கண்டனம்..


பாபி டியாேலின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து இதற்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர், “இதுவே ஒரு ஆண் ரசிகள் பெண் பிரபலத்திற்கு இதே முத்தத்தை கொடுத்திருந்தால் சும்மா விடுவீர்களா..” என்று கேட்டு வருகின்றனர். ஒரு சிலர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவரை தொடுவதற்கு முன்னர் அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இப்படி கலவையான கருத்துகளுடன் இந்த வீடியோ இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | சந்தானம் நடிக்கும் அடுத்த படம்! இதுவும் பேய் கதைதான்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ