கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.80 கோடிக்கு விற்பனை..செம குஷியில் ரசிகர்கள்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமை அமேசான் தளத்திற்கு 80 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் சூர்யா, தற்பாேது கங்குவான எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஸ்வாசம் விவேகம் என அஜித்தை வைத்து பிரபலமான படங்களை இயக்கிய சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். இப்படத்தின் கதை, ஃபேண்டசி ஃபிக்ஷன் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | “அவர் ஒன்றும் என் கணவர் இல்லை..” பீட்டர் குறித்து காட்டமான பதிவை வெளியிட்ட வனிதா
சூர்யா-சிறுத்தை சிவா கூட்டணி:
லோகேஷ் கனகராஜ்ஜின் விக்ரம் படத்தில் 10 நிமிடங்களே வந்தாலும் தனது கொடூர வில்லத்தனத்தால் பலரையும் பதைபதைக்க வைத்துவிட்டார் சூர்யா. அவரது 42ஆவது படமாக கங்குவா உருவாகி வருகிறது. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் கை கோர்க்கிறார், சூர்யா. இந்த படம், 100 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள கதை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி, ஃபேண்டசி ஃபிக்ஷனாகவும் இக்கதை உருவாகி வருகிறது. சிறுத்தை சிவாவுடனான கூட்டணி-இதுவரை தொடாத பாணியிலான கதை என கங்குவா படத்தில் முழுக்க முழுக்க புதுமை காட்டியுள்ளார் நடிகர் சூர்யா. சிறுத்தை சிவா மீது பெரும்பாலான ரசிகர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் சூர்யாவிற்காக படம் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என நம்புகின்றனர். இப்படம் குறித்த தற்போதைய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
80 காேடிக்கு டிஜிட்டல் உரிமம் விற்பனை:
கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடையே நாளுக்குநாள் எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு எகிற காரணம், படத்தின் போஸ்டருக்காக வெளியிடப்பட்ட வீடியோவில் இருந்து ஆரம்பித்தது. சூர்யாவை புதிய அவதாரத்தில் பார்க்கப்போகிறோம் என ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர். இதையடுத்து, இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் 80 காேடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட படம்:
சமீபத்தல் நடந்த ஒரு நேர்காணலில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது அவரிடம் படம் குறித் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கங்குவா படம்தான் இதுவரை தமிழில் வெளிவந்துள்ள படங்களிலேயே தியேட்டர் ரிலீஸிற்கு முன்னர் அதிக விலைக்கு டிஜிட்டல் உரிமைக்கு விற்கப்பட்ட படம் என கூறியுள்ளார்.
தொடர் ட்ரெண்டிங்கிள் இருக்கும் 3 படங்கள்:
கோலிவுட்டிற்கு இந்த வருடத்தின் அடுத்த பாதி, முழுக்க முழுக்க படத்திருவிழாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் பெரிய ஹீரோக்களின் பெரிய படங்களான தங்கலான், லியோ, ஜெயிலர் என பல படங்கள் வெளியாகவுள்ளன. இது மட்டுமன்றி விஜய்யின் லியோ படமும் சூர்யாவின் கங்குவா படமும் அஜித்தின் விடா முயற்சி படமும் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங்கிள் உள்ளன.
ஓடிடியை அதிகம் விரும்புகிறாரா சூர்யா?
சமீப காலங்களில் எந்த படம் வெளியானாலும் தியேட்டரில் வெளியாகிறதோ இல்லையோ கண்டிப்பாக ஓடிடியில் வெளியாகிவிடுகிறது. சூர்யா போன்ற பெரிய ஹீரோக்கள் கூட தங்களது படங்கள் ஓடிடியில் வெளியாவதை விரும்புகின்றனர். சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகின. இதையடுத்து, திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார், நடிகர் சூர்யா.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ