லியோ படத்தில் இணையும் விக்ரம் பட வில்லன்! அப்போ LCU கன்பார்ம்?

Leo update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்த ஒரு முக்கியமான நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 2, 2023, 11:24 AM IST
  • விஜய் நடிக்கும் லியோ படத்தில் காட்டு விலங்கான சிங்கம் நடிக்கப்போகிறது.
  • லியோ படத்தில் விக்ரமில் நடித்த ஜாபர் சாதிக் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
  • சிங்கத்தை உயிர்ப்பிக்கும் கிராஃபிக்ஸ் பணிக்கு ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
லியோ படத்தில் இணையும் விக்ரம் பட வில்லன்! அப்போ LCU கன்பார்ம்? title=

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படம் பற்றிய புதுப்புது அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றது.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர்-19ம் தேதியன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த மெகா ஆக்ஷன் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் சேர்ந்து த்ரிஷா நடிக்கிறார், மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.  அனிரூத் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார்.  காஷ்மீர் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது, தற்போது மே 5-ம் தேதியன்று  சென்னையில் ஒரு புதிய ஷெட்யூலுடன் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு தயாராக உள்ளது. 

மேலும் படிக்க | இயக்குனருக்கும் மகேஷ் பாபுவுக்கும் இடையே மோதல்? சிக்கலில் SSMB 28!

லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (LCU) கீழ் வருமா என்கிற கேள்வி படம் பற்றிய அறிவிப்பு வெளியானதோலிருந்தே ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  கைதி படத்தில் நடித்திருந்த சில முக்கியமான கதாபாத்திரங்கள் விக்ரம் படத்தில் இடம் பெற்றிருந்த நிலையில், லியோ படத்தில் அப்படி யாரும் நடிப்பார்களா என்பதை அறிய ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் அதுகுறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.  விக்ரம் படத்தில் நடித்திருந்த ஒரு முக்கியமான நடிகர் லியோ படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, விக்ரம் படத்திலிருந்து லியோ படத்தில் இணைந்ததாக கூறப்படும் அந்த முக்கியமான நபர் வேறு யாருமல்ல, நடிகரும், நடன கலைஞருமான ஜாபர் சாதிக் தான் என்பது தான் தற்போதைய லேட்டஸ்ட் தகவல்.  

'விக்ரம்' படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் தலைமையின் கீழ் செயல்படும் கும்பலின் உறுப்பினர்களுள் ஒருவராக நடித்திருந்தார்.  விக்ரம் படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் இவர் விஜய்யின் 'லியோ' படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் பலரும் நினைக்கின்றனர், ஆனால் உண்மையிலேயே 'லியோ; படத்தில் ஜாபர் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.  இதற்கு முன்னர் 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் காட்டுக்கே ராஜாவான சிங்கம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது.  

jaffer

இந்த செய்தி கிட்டத்தட்ட நம்பும்படியாகவும் இருந்தது, ஏனென்றால் படத்தின் தலைப்பினை 'லியோ' என்கிற பெயர் சிங்கம் என்று பொருள்படுவதால் இப்படத்தில் சிங்கம் நடிக்கக்கூடும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.  இந்த படத்தில் சிங்கத்தை உயிர்ப்பிக்கும் கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்த கிராஃபிக்ஸ் பணிக்காக படக்குழு ரூ.15 கோடி செலவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  'லியோ' படத்தில் ஜாபர் சாதிக் நடிக்கப்போவது பற்றி எப்படி அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லையோ அதேபோன்று தான், 'லியோ' படத்தில் சிங்கம் நடிக்கப்போகிறது என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இதுபோன்ற அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | V என்ற எழுத்தை விடாத அஜித்... மறைந்திருக்கும் ரகசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News