பிரபல நடிகரின் கார் மோதி பெண் பலி..! போலீஸார் கைது செய்து விசாரணை..!
Kannada Actor Accident: பிரபல நடிகர் ஒருவரின் கார் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகர் நாகபூஷனா ஓட்டி வந்த கார், 48 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் அவரது கணவர் மீது மோதியுள்ளது. இதில், அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாகபூஷனா:
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரகளாக விளங்குபவர்களுள் ஒருவர், நாகபூஷனா. இவர், தமிழில் வெளியான யூ டர்ன் படத்தில் ஆட்டோ ஓட்டுநர் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர, கன்னடத்தில் ஹிட் ஆன பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் சமூகத்திற்கு கருத்து தெரிவிக்கும் காமெடி படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | சாலை விபத்தில் உயிரிழந்த பிரபல மலையாள நடிகர்..மீள முடியா துயரத்தில் ரசிகர்கள்!
விபத்து:
நாகபூஷனா பெங்களூருவில் உள்ள வசந்தபுரா மெயின் ரோட்டில் கடந்த சனிக்கிழமை இரவு தனது காரை ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அப்போது ச்நடைபாதையில் நடந்து வந்து கொண்டிருந்த கணவன், மனைவி இருவர் மீது இவரது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் பலத்த அடிப்பட்டுள்ளது. இந்த விபத்து சுமார் 9.05 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்தால், காரை ஓட்டிக்கொண்டு வந்த நாகபூஷனாவிற்கும் அடிப்பட்டுள்ளது. இவரையும் விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில், விபத்தில் சிக்கிய 48 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் விபத்தில் சிக்கியவர்களின் பெயர் கிருஷ்ணா மற்றும் பிரேமா என்பதும் தெரிய வந்தது. இதில், கிருஷ்ணாவிற்கு 58 வயதாகிறது, பிரேமாவிற்கு 48 வயதாகிறது.
வழக்கு பதிவு:
இந்த விபத்தை அடுத்து, அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் காரை ஓட்டியதாக நடிகர் நாகபூஷனா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ