Actor Sarath Babu Hospitalized: பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சரத் பாபு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு பெங்களூரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 71 வயதான சரத்பாபு, விரைவில் குணமடைந்து நலம்பெற பிரபலங்கள், சக நடிகர்கள், ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சமீபத்திய அறிக்கைகளின்படி, சில கடைசி நிமிட உடல்நலக்கோளாறு காரணமாக சரத்பாபுவை ஹைதராபாத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டது. சரத்பாபு, ஹைதராபாத்தின் கச்சிபௌலியில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். மேலும் அவர் சற்று கவலைக்குரிய உடல் நலத்தில் இருந்து உடல்நலனில் தேறி வருவதாக முடிவுகளைக் காட்டுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய அறிக்கைகளின்படி, சரத்பாபு மீண்டும் பொது சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறப்பட்டாலும், அவர் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எதுவும் கூறவில்லை.
மேலும் படிக்க | "அயலான்" படம் குறித்து முக்கிய அறிவிப்பு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
"அண்ணாமலை" பட புகழ் நடிகர், சில வருடங்களாக படங்களில் நடிக்காமல், சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சரத் பாபு ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக கொண்டாடப்பட்டார்.
அவரின் வசீகரமிக்க தோற்றத்திற்காக அறியப்பட்டார். நான்கு தசாப்தங்களாக திரைப்படத்துறையில் உச்சத்தில் பணியாற்றினார். அவர் தென்னிந்திய சினிமாவின் சில பெரிய நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
1971ஆம் ஆண்டு கே பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் மூலம் திரையில் அறிமுகமானார். அந்த காலகட்டத்தின் முக்கியமான படங்களான நிழல் நிஜமாகிறது, அண்ணாமலை, முத்து, பாபா, புதிய கீதை போன்ற மெகா ஹிட் படங்களில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற முக்கிய சூப்பர்ஸ்டார்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரஜினிகாந்தின் 90களின் பிளாக்பஸ்டர் படங்களில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்திருந்தார்.
சரத்பாபு, பின்னர் தொலைக்காட்சித் தொடர்களுக்குச் சென்று அங்கும் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து முறையே சிறந்த நடிகர் மற்றும் சிறந்த துணை நடிகருக்கான மாநில அரசின் விருதுகளை வென்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ