சாலை விபத்தில் ஒரு காலை இழந்த பிரபல நடிகர்..! என்ன நடந்தது?
Shivaraj Kumar Accident: கன்னட திரையுலகில் நடிகராக வலம் வருபவர் சுராஜ் குமார். இவர், ஒரு நேற்று பெரும் விபத்து ஒன்றில் சிக்கினார்.
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர், சுராஜ் குமார். இவருக்கு துருவன் என்ற இன்னொரு பெயரும் உள்ளது. கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளராக விளங்கும் எஸ்.ஏ ஸ்ரீனிவாசின் மகன் இவர். 24 வயதாகும் சுராஜிற்கு பைக் ஓட்டும் பழக்கம் இருந்துள்ளது. நேரத்தை போக்க அவ்வப்போது இவர் பைக் ரைட் செய்வார் என கூறப்படுகிறது. இந்த ஹாபிதான் இவரது விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
விபத்தில் சிக்கிய நடிகர்:
சுராஜ் குமார் கர்நாடகாவில் உள்ள சமரஞ்ச நகர் பகுதியில் உள்ள குந்தல்பேட் தாலுக்கா வழியே பைக் ஓட்டிக்கொண்டு கடந்த சனிக்கிழமை அன்று வந்துள்லார். அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த ட்ரிப்பர் லாரியின் மீது சுராஜ் குமார் வேகமாக வந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நேர்ந்ததும் அருகில் இருந்தவர்கள் இவரை மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.
போலீஸ் தரப்பில் கூறியது:
ட்ரிப்பர் லாரியில் மோதிய நடிகருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், சுராஜ் ஊட்டியில் இருந்து பைக்கில் பயணம் மேற்கொண்டு வந்ததாகவும், குந்தல்பேட்டிற்கு அருகில் வந்து கொண்டிருந்த போது முன்னாள் சென்ற ட்ரிப்பர் லாரி மீது அவர் வண்டி மோதியதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படி வேகமாக வந்து மோதியதில் நடிகரின் கால் முழுவதும் ட்ரிப்பர் லாரியில் அடிப்பட்டு நசுங்கியுள்ளதாகவும் அதன் பிறகு அவர் உடனடியாக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
காலை இழந்த நடிகர்:
இந்த பெரும் விபத்தில் சுராஜின் கால் லாரியின் சக்கரத்தில் சிக்கியதாகவும் அதனால் அப்படியே நசுங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது உயிரை காப்பாற்ற சுராஜின் அடிப்பட்ட காலை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். சுராஜ் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
முதல் படத்தில் நடிக்க இருந்தவர்..
தயாரிப்பாளரின் மகனான சுராஜ் ஆயிர்வதா மற்றும் தாரக் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இவர், பக்வான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என்ற படத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தார். இந்த படத்தை அனுப் ஆண்டனி என்ற பிரபல இயக்குநர் இயக்குகிறார். இந்த படத்தின் பணிகள் லின்னும் தொடங்க படாத நிலையில் ‘ரத்தம்’ என்ற ஒரு படத்தில் சுராஜ் நடிக்க இருந்தார். இந்த நிலையில் இவருக்கு இப்படியொரு விபத்து நேர்ந்துள்ளது அவரது குடும்பத்தினர் உள்பட பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவராஜ் குமார்:
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுராஜிடமும் அவரது தந்தையிடமும் நல்ல நட்பு பாராட்டக்கூடியவர். அது மட்டுமன்றி, சிவராஜ் குமார் சுராஜிற்கு உறவினரும் கூட. சுராஜிற்கு அடிப்பட்ட செய்தி கேட்டவுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவமனைக்கு வந்து அவரை சந்தித்துள்ளார்.
ட்ரைவர் கைது:
விபத்துக்கு காரணமாக இருந்த ட்ரிப்பர் லாரி ஓட்டுநர் மீது பெகூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்த அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க | Actress Sharmili: 48 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பிரபல நடிகை...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ