இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் என்பதை குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்நீரா என்பதற்கு கண்ணுக்குள் இருக்கிற நீர் போல என்று பொருள் காதல் என்றாலே கண்ணீருக்கு பஞ்சமிருக்காது, அதோடு படத்தில் நாயகியின் கதாபாத்திரத்தின் பெயர் நீரா எனவே இரண்டையும் இணைத்து " கண்நீரா " என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.


இந்த படத்தை மலேசியா வாழ் தமிழர் கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார். நயாகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் NKR ஆகியோர் நடித்துள்ளனர்.


படத்தின் கதை எழுதி இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம். படம் பற்றி இயக்குனர் கதிரவென் பேசியதாவது...


லவ் படம் என்றாலே பேண்டஸி இருக்கும் ஆனால் இது முற்றிலும் மாறுபட்ட மிகவும் யதார்த்தமான காதல் கதை. நூத்துக்கு தொண்ணூறு சதவீதம் பேர் காதல் Relationship -ல கண்டிப்பா இருப்பாங்க, இல்ல கடந்து வந்திறுப்பாங்க. காதலர்களுக்கு  என்னமாதிரியான அணுகுமுறை தேவைப்படுகிறது என்பதை ஆர்ட் ஃபிலிமா இல்லாம கமர்சியல் கலந்து ஜனரஞ்சகமான படமாக  உருவாக்கி இருக்கிறோம்.


படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும்  என் வாழ்வில் நடந்தது என் ஃபேமிலியில் நடந்தது என்று ரசிகர்களை குளோஸா அவங்க ஹார்டை டச் பண்ற மாதிரியான மிக்ஸ்சான எமோசன்ஸ் இதில் இருக்கு. படம் பார்ப்பவர்கள் தங்களை நிச்சயம் நெருக்கமாக தொடர்பு படுதிப்பாங்க.


படப்பிடிப்பு முழுவதும் மலேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது என்றார் இயக்குனர் கதிரவென். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


கண்நீரா இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது...


கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர்  இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார். சாதாரணமாக குடும்பங்களில் திரைப்படத்திற்கு எதிராகத் தான் பேசுவார்கள், ஆனால் இப்படத்தில் அவரது மனைவி அவருக்கு உறுதுணையாக நின்று, படத்தை உருவாக்கியுள்ளார். இருவருக்கும் என் மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரொமான்ஸ் படங்கள் வருவது இப்போது குறைந்து விட்டது. அந்த  வகையில் இந்த திரைப்படத்தினை காதலை மையமாக வைத்து மிகச் சிறப்பாக எடுத்துள்ளனர். நீண்ட நாள் கழித்து நல்ல காதல் படம் வருகிறது. மலேசியாவில் எடுத்து, இங்கு வெளியிடுகிறார்கள். அனைவரும் ஆதரவு தர வேண்டும்.  சின்ன படங்கள் ஓடவில்லை என சொல்கிறார்கள், சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். இதைக் கண்டிப்பாகப் பேசித் தான் தீர்க்க  வேண்டும். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. சின்னப்படங்களுக்கு மக்களை வரவைக்க, என்ன செய்ய வேண்டும். இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும். திரையரங்கில் மக்கள் வாங்கும் பொருட்கள் கொள்ளை விலையில் இருக்கிறது. கார் பார்க்கிங்க் கொள்ளை இப்படி இருந்தால், மக்கள் எப்படி வருவார்கள். நம் மீது குறை வைத்துக்கொண்டு மக்களைக் குறை சொல்லக்கூடாது. இவர்கள் பல கஷ்டப்பட்டு இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.


மேலும் படிக்க | அடையாளமே தெரியாமல் மாறிப்போன அஜித்!! எலும்பும் தோலுமா ஆயிட்டாரே..வைரல் போட்டோஸ்


மேலும் படிக்க | பிக்பாஸ் சீசன் 8யில் வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி ஒருநாள் சம்பளம் இவ்வளவா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ