‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்ட நிலையில் கபாலி திரையிடும் தியேட்டர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. விற்பனை தொடங்கிய 2 மணி நேரத்திலேயே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெள்ளி, சனி, ஞாயிறு விடு முறைநாட்கள் என்பதாலும், ரஜினியின் ‘கபாலி’ படம் பற்றிய எதிர் பார்ப்பு அதிகமாக இருப்பதாலும் டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து விட்டதாக தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 


எப்படியும் முன்பதிவிலேயே ரூ 40 கோடியை கபாலி தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.


கபாலி உலக தமிழகர்களே எதிர்ப்பார்க்கும் ஒரு படம். இப்படம் உலகம் முழுக்க ரூ 200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதுவரை வேறு எந்த தென்னிந்திய படங்களும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.