Dear Comrade திரைப்பட இந்தி ரீமேக் உரிமை பெற்றார் கரன் ஜோஹர்!
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள டியர் காம்ரேட் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை இயக்குனர் கரன் ஜோஹர் பெற்றுள்ளார். அதேவேளையில் சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் குழுமம் பெற்றுள்ளது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஹிட் ஜோடியின் இரண்டாவது படமாக டியர் காம்ரேட் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ளார்.
அர்ஜூன் ரெட்டி திரைப்படத்திற்கு பின்னர், அவருடைய அடுத்த தெலுங்குப் படமான 'கீத கோவிந்தம்' தமிழகத்தில் பல திரையரங்குகளில் வெளியாகி 75 நாள்கள் ஓடியது. அதைத் தொடர்ந்து, தமிழில், நேரடியாகக் கடந்த ஆண்டு அரசியல் த்ரில்லர் படமான 'நோட்டா' வாயிலாக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் தரவில்லை, என்றபோதிலும் அவருக்குத் தமிழில் ஒரு நல்ல மார்க்கெட்டை உருவாக்கித் தந்தது.
இந்நிலையில் `கீத கோவிந்தம்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த ஜோடி தற்போது ‘டியர் காம்ரேட்’ திரைப்படத்திலும் இணைந்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் வாங்கியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் ஏற்கனவே வெளியான பெல்லி சூப்லு மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகியப் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கரன் ஜோஹர் தற்போது டியர் காம்ரேட் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், டியர் காம்ரேட் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையினை சன் குழுமம் பெற்றுள்ளாதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.