கலைகள் பலவிதம், அதில் புதுமையை புகுத்தி உலக சாதனைகளை படைப்பதில் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஒரு மில்லியன் ஸ்டேப்லர் பின்களை பயன்படுத்தி 'கர்ணன்' திரைப்பட நடிகர் தனுஷின் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
சீவக வழுதி என்பவர் 'கர்ணன்' படத்தில் இடம்பெற்ற தனுஷின் போஸ்டரை ஸ்டேப்லர் பின்னை வைத்து உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதற்க்கு 'கர்ணன்' பட தயாரிப்பாளர் தாணு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் தாணு, ”புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான், இன்னும் உருவாக்குவான், இந்த கலைப் படைப்பை வரைந்து சாதனை புரிந்த கலைஞர் சீவக வழுதிக்கு வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்.



"கொடியன்குளம்" கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கர்ணன்.  1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் பல சாதனைகளை புரிந்துள்ளது.  


கர்ணன் படத்தில் தனுஷ், காட்டு பேச்சி முன்பு அமர்ந்திருக்கும் காட்சியை ஓவியர் சீவக வழுதி 10 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டேப்ல் பின்களைக் கொண்டு வரைந்துள்ளார். இந்த சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்டில் இடம்பெற்றுள்ளது.


Also Read | தனுஷின் 19 வருஷ ரெக்கார்டு பிரேக்கிங், கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எத்தனை?


சீவக வழுதி ஸ்டேப்லர் பின் கொண்டு கலைப்படைப்பை உருவாக்கும் விதம் வீடியோவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


வெளிநாடுகளில் பரவலாகியிருக்கும் ஸ்டேப்லர் ஆர்ட் (Staple Art), இந்தியாவில் அந்த அளவு பிரபலமானதில்லை. தினமும் நான்கு –ஐந்து மணி நேரம் என ஒரு மாத காலத்தில் இந்த கலைப்படைப்பை சீவக வழுதி செய்துள்ளார்.


கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் நடிப்பு மிகவும் பிடித்துப்போனதால், அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த கலைப்படைப்பை கலைஞர் சீவக வழுதி படைத்துள்ளார்.


Also Read | கர்ணன் FDFS திருவிழா, தியேட்டர்களில் குவிந்த தனுஷ் ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR