கார்த்திகை தீபம்: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி
Karthigai Deepam Today`s Episode Update: தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.
கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் ரம்யாவும் போட்டி போட்டு கொண்டு கிப்ட் வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேலும் படிக்க | அமரன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் .. விரைவில் ரிலீஸ்!
அதாவது அபிராமி வீட்டில் கல்யாண நாள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கேக்குடன் தயார் நிலையில் இருக்கின்றனர், மறுபக்கம் பங்க்ஷன் கிளம்பிய ரம்யா அப்பாவையும் பங்க்ஷனுக்கு கூப்பிட அவர் எனக்கு உடம்பு முடியல நீ மட்டும் போயிட்டு வா மா என்று சொல்கிறார்.
எப்படியாவது ரம்யா கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருவதை தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறாள், இதற்காக பிளான் போட்டு ஒரு ஆளை ஏற்பாடு செய்து ரம்யா கிளம்ப உள்ள காரை ரிப்பேர் செய்து விட கார் ஸ்டார்ட் ஆகாமல் போய் விடுகிறது.
இதனையடுத்து ரம்யா கேப் புக் செய்து தீபா வீட்டிற்கு வந்து கொண்டிருக்க இங்க தீபா ரம்யா வருவதா சொன்னா அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சொல்லி அனைவரும் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவின் முதல் அட்டெம்ப்ட் தோல்வி அடைந்ததும் அடுத்து அவளே கார் எடுத்து வந்து ரம்யா வரும் கேப் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ரம்யாவின் நேரத்தை வீணடிக்கிறார்.
மறுபக்கம் அபிராமி வீட்டில் எல்லாரும் ரம்யா வருகைக்காக காத்திருக்க தீபா அவளுக்கு போன் செய்ய ரம்யா போனை கவனிக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?
கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | Kalki 2898 AD: கல்கி படத்தில் புஜ்ஜி கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்த கீர்த்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ