)
Sivakarthikeyan Amaran Movie Update: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காணபோம்.
நடிகர் சிவகார்த்திகேயன் :
நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan), ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிராமத்து கதாநாயகன் கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தி போக, அதே போன்று பல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனிடையே தற்போது கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
சிவகார்த்திகேயனின் அமரன்:
இதனிடையே தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் 'அமரன்'. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. அதேபோல் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராணுவ அதிகாரியாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது.
முன்னதாக அமரன் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டியிருந்தார். மேலும் இதில் மேஜர் முகுந்த் என்கிற சட்டையில் உள்ள நேம் பேட்ஜையும் காட்டி ஏற்கனவே கசிந்த தகவல் எல்லாம் உண்மை தான் என்பதை உறுதியானது.
அமரன் ரிலீஸ் தேதி:
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் மூன்று பாடல் சூட்டிங்கிற்கு பிறகு படப்பிடிப்பு முடியயுள்ளது, அதன்பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெறும். அதனுடன் கூடிய விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதன் மூலம் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமரன் படம் அமையும் என்று கூறப்படுகிறது.
#Amaran - Entire Shoot to be wrapped up with a three day song shoot.. Release Date Announcement soon..
— Laxmi Kanth (@iammoviebuff007) May 23, 2024
After #Maaveeran , Another solid content which will showcase the performer side of #Sivakarthikeyan .. pic.twitter.com/wYCN4ZbHjP
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ