தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் இருக்கும் அபிராமியுடன் கடத்தியது யாரோ பிசினஸ் எதிரி என்று பொய் சொன்ன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


ஹாஸ்பிடலுக்கு வரும் கார்த்திக் 


அதாவது தீபா ஏன் அத்தை கிட்ட பொய் சொன்னீங்க என்று கேள்வி கேட்க அவன் அதுக்கு ஒரு காரணம் இருக்கு என்று சொல்கிறான்.



அடுத்ததாக கதிர் அட்மிட் செய்யப்பட்டு இருக்கும் ஹாஸ்பிடலுக்கு வரும் கார்த்திக் கதிர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதனால் நீங்க கதிருக்கு சுய நினைவு வந்து விட்டதாக சொல்லுங்க, மற்றவற்றை அப்புறம் பாத்துக்கலாம் என்று சொல்கிறான், யாரவது பார்க்க வந்தா எனக்கு தகவல் கொடுங்க என்று சொல்கிறான். 



அபிராமிக்கு ஐஸ் வைக்கும் நட்சத்திரா


இங்கே வீட்டிற்கு வரும் நட்சத்திரா அபிராமியை சந்தித்து இந்த வீட்டோட சமையல் வேலையை மீனாட்சி கவனிச்சிக்கறாங்க, நிர்வாகத்தை ஐஸ்வர்யா அக்கா கவனிச்சிக்கறாங்க.. ஆனால் உங்களை பாத்துக்க யாரும் இல்ல, நான் தானே பார்த்துக்கணும் அதனால் தான் பழம் எல்லாம் வாங்கி வந்திருக்கேன் என்று ஐஸ் வைத்து பேசுகிறாள். 


மேலும் படிக்க | பிரபல தெலுங்கு நடிகரிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய சமந்தா..?


அது மட்டுமில்லாமல் கார்த்தியோட கல்யாணம் ஆகி இருந்தா இந்த வீட்ல இருந்து உங்களை பாத்துட்டு இருப்பேன் என்று சொல்ல அபிராமி என்னுடையப பரம்பரை வளையலை உனக்கு தரேன் என்று உள்ளே போகிறாள். இதற்கிடையில் நட்சத்திரா தீபாவிடம் இப்படியே பேசி பேசி இந்த வீட்டோட மருமகளாகி விடுவேன், உன்னை கூடிய சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே அனுப்பறேன் என்று சவால் விடுகிறாள். 


ஹாஸ்பிடலுக்கு வரும் நட்சத்திரா


ஹாஸ்பிடலில் டாக்டர் கதிருக்கு பழைய நினைவுகள் வந்து விட்டது என்று சொல்ல அதை கேட்கும் வார்டு பாய் நட்சத்திராவுக்கு தகவல் சொல்ல அவள் உடனடியா ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள். 


கானத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


கார்த்திகை தீபம்: : சீரியலை எங்கு பார்ப்பது?


கார்த்திகை தீபம் ன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ‘குட் நைட்’ நாயகன் மணிகண்டனின் அடுத்த படம்..! விஜய் சேதுபதி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ