அண்ணா சீரியல்: முத்துபாண்டியை புரட்டி எடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டி போடும் அடுத்த பிளான்?

Anna Serial Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கும் என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 5, 2023, 01:59 PM IST
  • திங்கள் முதல் சனி வரை இந்த சீரியல் ஒளிபரப்பாகும்.
  • ஷண்முகம் முத்துபாண்டிக்கு மரண அடி கொடுக்கிறார்.
  • முத்துபாண்டியின் தலையில் குண்டாவை கவிழ்த்து அடித்தார்.
அண்ணா சீரியல்: முத்துபாண்டியை புரட்டி எடுத்த ஷண்முகம்.. சௌந்தரபாண்டி போடும் அடுத்த பிளான்? title=

Anna Serial Today Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வீடு புகுந்து அராஜகம் செய்த முத்துபாண்டியை அடி வெளுத்தெடுக்க ஷண்முகம் ரோட்டில் காத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

முத்துப்பாண்டிக்கு தர்மஅடி

அதாவது முத்துப்பாண்டி வண்டியில் வந்து கொண்டிருக்க கட்டையுடன் காத்திருக்கும் ஷண்முகம் அந்த கட்டையை தூக்கி போட்டு முத்துபாண்டியை கீழே விழ வைத்து தலையில் குண்டாவை மாட்டி அடி வெளுத்தெடுத்து ஒரு செல்பியையும் எடுத்து கொள்கிறான். 

கிழிந்த சட்டையுடன் என்ட்ரி

இங்கே வீட்டில் ரத்னா, 'அண்ணா கிட்ட எதுக்கு சொன்னீங்க? இப்போ அண்ணாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது' என்று பதற மற்ற தங்கைகள் 'அண்ணன் இரும்பு மாதிரி, அவருக்கு ஒன்னும் ஆகாது' என்று பேசுகின்றனர். ரத்னா அப்பாவை 'ஒரு எட்டி பார்த்துட்டு வாங்க' என்று சொல்ல அவரும் கிளம்ப சட்டை கிழிந்து போய் ஷண்முகம் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க தங்கைகள் என்னாச்சு என்று பதறுகின்றனர். 

ஷாக்

அந்த 'முத்துபாண்டியை போட்டு வெளுத்து எடுத்துட்டேன், அவன் உடம்புல அடி படாத இடமே கிடையாது' என்று சொல்ல தங்கைகள் சந்தோஷப்படுகின்றனர். அப்படியே மறுபக்கம் முத்துபாண்டியை எல்லாரும் வீட்டிற்கு அழைத்து வர சௌந்தரபாண்டி 'யாருடா இது' என்று கேட்க 'நம்ம முத்துப்பாண்டி தான், அந்த ஷண்முகம் பையன் இப்படி பண்ணிட்டான்' என்று சொல்ல ஷாக் ஆகிறார். 

மேலும் படிக்க | "Please வதந்தி பரப்பாதீங்க" கண்ணீருடன் நடிகை ஸ்ருதி வீடியோ!

இதை கேட்டு முதலில் ஷாக்காகும் பரணியும் பாக்கியமும் பிறகு சிரித்து விடுகின்றனர், இங்கே ஷண்முகத்திற்கு அப்பா கஷாயம் வைத்து எடுத்து வந்து கொடுக்க அவன் முதலில் ஸ்வீட் சாப்பிடலாம் என்று சுவீட்டை எடுத்து கொடுக்கிறான். சௌந்தரபாண்டி தலையில் மாட்டிய குண்டானை எடுக்க முடியாததால் ப்ளம்பரை கூப்பிட்டு வர சொல்லி ஆளை அனுப்பி வைக்கிறார். 

ஷண்முகம் வீடியோ கால்

பிறகு பரணி காயத்துக்கு மருந்து போட்டு விட அவன் இவ வேணும்னே அழுத்தி அழுத்தி எடுக்கிறா என்று சத்தம் போட உருண்டு பிரண்டு அடி வாங்குனதுல மண் எல்லாம் உள்ள போய்டுச்சு, செப்டிக் ஆகி போயிருக்கு அப்படி தான் எடுக்க முடியும் என்று சொல்ல சௌந்தரபாண்டி மெதுவா எடு என்று சொல்கிறான். அப்படினா நீங்களே எடுங்க என்று சொல்லி பஞ்சை கொடுத்து எழுந்து சென்று விடுகிறாள். 

ரத்னா இங்கே என்ன நடக்குதுன்னு தெரிந்து கொள்ள போன் செய்ய முதலில் போன் எடுக்காத பரணி இப்போ திரும்பவும் போன் போட்டு பேசும் போது அடி பலமா விழுந்திருக்கு என்று சொல்ல ஷண்முகம் டாக்டர் அம்மா அடி கொடுத்ததுல உடம்பெல்லாம் வலியா இருக்கு, அதுக்கு ஏதாவது ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்க முதலில் அடி வாங்குனவனுக்கு ட்ரீட்மெண்ட் தர, அப்புறம் உனக்கு வந்து ட்ரீட்மெண்ட் தரேன் என்று பதில் கொடுக்கிறாள். பிறகு முத்துப்பாண்டி நிலையை பார்க்க ஆசைப்பட்டு ஷண்முகம் வீடியோ கால் செய்கின்றனர்.

மறக்காமல் பாருங்கள்

இங்கே சௌந்தரபாண்டி மெதுவா மண்ணை எடுக்க முயற்சி செய்ய எதுவும் வெளியே வராததால் மீண்டும் பரணியிடமே எடுக்க சொல்ல இந்த முறை அவள் வேண்டும் என்றே அழுத்தி அழுத்தி எடுக்க முத்துப்பாண்டி வலியில் கதறுகிறான். இதனை பார்த்து ரத்னா உட்பட எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். அடுத்து சௌந்தரபாண்டி உன்னை அடிச்சவனை நீ சும்மா விட கூடாது. 

போலீஸ்க்காரன் மேல கை வைத்ததா சொல்லி சண்முகத்தை கைது செய்து கையை காலை உடைக்க ஐடியா கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News