கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்று தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தின்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்த்திக் போட்ட ஸ்கெட்ச்.. தீபா எடுத்த முடிவு கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்:


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவியின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என பிளான் போட்ட கார்த்திக் இளையராஜாவை வைத்து ரூபாஸ்ரீயிடம் அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்கினான். 


மேலும் படிக்க | நயன்தாராவுடன் நடிக்க நடிகர் ஜெய் வாங்கிய சம்பளம் எவ்வளவு?


இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் தீபா தனது ஊருக்கு கிளம்பி வரும் போது ஒரு கோவிலுக்கு சென்று இந்த பிரச்சனையில் இருந்து நான் எப்படி வெளியே வர போறேன்னு தெரியல, நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும் என வேண்டி கொள்கிறாள்.  அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த கோகிலா இனியனுக்கு உடம்பு சரியில்லை என கேள்விப்பட்டேன். அவனுடைய மருத்துவ செலவுக்காக இந்த பணத்தை வச்சிக்கோங்க என்று பணத்தை கொடுத்து தீபாவிடம் நீ வந்து பாடி தான் ஆகணும் என மிரட்ட வேறு வழியில்லாமல் பாட ஒப்பு கொள்கிறாள். வீட்டில் மீனாட்சி தீபாவுக்காக காத்திருக்க ஐஸ்வர்யா அதெல்லாம் வருவா என்று சொல்லி உள்ளே செல்கிறாள். 


தீபா வீட்டுக்கு வந்ததும் எங்க போயிருந்த என்று விசாரிக்க இனியனை பார்க்க ஊருக்கு போய் இருந்ததாகவும் பல்லவியை கண்டுபிடிக்க கார்த்தி போட்டிருக்கும் பிளானை பற்றியும் சொல்லி எனக்கு நீங்க தான் உதவனும் என்று கேட்கிறாள். மேலும் தீபா வேறு வழியில்லை பாடி தான் ஆகணும் என்று சொல்ல மீனாட்சி சரி பார்த்துக்கலாம் என்று சொல்கிறாள். 


அடுத்ததாக மறுநாள் கார்த்திக் வீட்டிற்கு கச்சேரிக்கு கூப்பிட நீங்க முன்னாடி போங்க, மீனாட்சி அக்கா கூட நான் வெளியே போயிட்டு வரேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்த கார்த்திக் கோகிலா போட்டிருக்கும் செட்டப்பை பார்த்து பல்லவி பாட போகும் இடம் இது தான் என்பதை உறுதி செய்து கொள்கிறான். 


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | அடுத்த மாதம் 2 நாட்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் நடைபெறாது - திரையுலகம் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ