Tamil Serial Karthigai Deepam Today (11.9.2024) Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கீதா குறித்த மொத்த உண்மையும் தெரிய வந்ததை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, ஐஸ்வர்யா சரவணனை தனியாக சந்தித்து எனக்கு என்னமோ வீட்டிற்கு வந்திருக்க தீபாவின் நடவடிக்கையை எல்லாம் பார்க்கும் போது சந்தேகமா இருக்கு, வேற யாரோ தீபா வேஷம் போட்டு வந்திருக்க மாதிரி இருப்பதாக சொல்கிறாள். 


அடுத்து சரவணன் கார்த்திக்கை தனியாக சந்தித்து உன் வீட்டிற்கு வந்திருப்பது கீதா, மினிஸ்டரோட தம்பியை கொன்னுட்டு உன் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்து இருக்கா என்று சொல்ல கார்த்திக் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். 


பிறகு வீட்டிற்கு வந்த கார்த்திக் கீதாவிடம் நீங்க யாருனு எனக்கு தெரிந்து போச்சு, உங்க பேரு கீதா. ஒரு கொலையை பண்ணிட்டு இங்க தப்பித்து வந்திருக்கீங்க என்று சொல்ல கீதா எல்லா உண்மையும் தெரிந்து போச்சா இங்க இருந்து தப்பித்து போறேன் என்று சொல்லி கிளம்ப கார்த்திக் உங்க பக்கம் நியாயம் என்ன? ஏன் இப்படி பண்ணீங்கன்னு எனக்கு தெரியல.. ஆனால் உங்களுக்கு நான் உதவுறேன் என்று சொல்கிறான். 


இதை கேட்ட கீதா என்ன நடந்துச்சுனே தெரியாமல் எனக்கு உதவுறீங்களா? என்று நடந்த விஷயங்களை சொல்கிறாள். அதாவது, எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி எம்.எல்.ஏ- ஓட தம்பி ஏமாத்திட்டான் அதனால் தான் அவனை கொன்னேன். சொல்ல போனால் இது கொலை இல்ல வதம் என்று நடந்ததை சொல்லி முடிக்கிறாள். 


மறுபக்கம் ஒரு பெண்மணி மலை உச்சியில் இருந்து ஒரு பொண்ணு விழுந்து விட்டதாக சொல்லி ஹாஸ்பிடலுக்கு அழைத்து வர அது தீபா என தெரிய வருகிறது. டாக்டர் இங்க மருத்துவம் பார்க்க முடியாது சென்னைக்கு கூட்டிட்டு போங்க என்றுசொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் 10 பிரபலமான தமிழ் நடிகைகள் இவங்க தான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ